பெண்களின் கண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள்!

A must-have beauty tip for eyes
beauty tipsImage credit - pixabay
Published on

பெண்களின் கண்களுக்கும் அழகுக்கும் மிகவும் தொடர்பு உண்டு. கண்கள், மனத்தின் சன்னல்கள். ஆகையால், பெண்கள் தங்கள் கண்களை அழகுடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டால்தான் கவர்ச்சியுடன் இருக்க முடியும். கண்களில் அழுக்குப் படியாமல் பார்த்து கொள்ள வேண்டும் கண்களின் அளவுக்கு ஏற்றபடி புருவங்களைத் தீட்டிக்கொள்ள வேண்டும். கண்கள் எப்போதும் பளபளப்புடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

ளஞ்சூடான சுத்தமான தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பைப் போட்டு ஆறவைத்து கண்களை இந்த தண்ணீரால் கழுவவேண்டும். ஒரு தடவை உபயோகித்த தண்ணீரை மறுபடியும் உபயோகிக்கக் கூடாது. வாரத்திற்கு ஒருமுறை இப்படி செய்தால் போதும் கண்களில் ஒளி, முகத்தில் பேரழகு!

சிலருக்கு கண்களுக்கு அடியில் கருமை படர்ந்திருக்கும். இது அழகைக் கெடுக்கும். இந்த கருமையைப்போக்க, பெண்கள் இரவில் நன்றாகத் தூங்க வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

ங்கள் கண்களுக்கு மை தீட்டிக்கொள்ளும் பழக்கமுள்ள பெண்கள் படுக்கப்போகும்போது சோப்புப்போட்டு முகத்தைக் கழுவிவிட்டு படுக்கவேண்டும். கண் மையுடன் தூங்கினால், கண்கள் விரைவில் கெட்டுவிடும்.

மை போட்டுக்கொள்வதற்கு முன் கண்களை சுத்தம் செய்ய இளம் வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். அல்லது பன்னீர் பயன்படுத்தலாம். பச்சைத் தண்ணீரில் கழுவினால் மை கரை சுத்தமாக போகாது.

ண் மையை வீட்டிலேயே செய்துகொண்டால் அது மிகவும் நல்லது. முன்னோர்களிடம் கண் மை தயாரிப்பதைப் பற்றிக் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

பெண்கள், தங்களுடைய இமைகளுக்கு மை தீட்டும்போது, மோதிர விரல் நுனியில் மையைத் தொட்டு இமையின் நடுவிலிருந்து முதலில் இடப் பக்கமாகவும், பிறகு வலப்பக்க மாகவும் மெல்லத் தீட்ட வேண்டும். புருவங்களுக்கு மை தீட்ட, மை பென்சில்களைப் பயன்படுத்தலாம். இந்த பென்சில்களை இமைகளுக்கு உபயோகிக்கக் கூடாது. புருவங்களுக்கு போடும்போது தோலின் மீது கோடுகள் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் பார்த்தால் கண்கள் வீங்கிப்போய் இருக்கும். முகத்திற்குப் போடும் மேக்கப்பொருட்கள் உடலுக்கு ஏற்றுக் கொள்ளாததுதான் இதற்கு காரணம்.

மூக்கு கண்ணாடி அணிகிறவர்கள், தங்கள் புருவங்களை மறைக்கும் பெரிய மூக்குக் கண்ணாடி பிரேம்களாகப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். புருவங்களை மறைக்கும் கண்ணாடிதான் ஃபேஷன்.

இதையும் படியுங்கள்:
அழகழகாய் வித்தியாசமான லிப்ஸ்டிக் வகைகள்!
A must-have beauty tip for eyes

ண்களுக்கு அடியில் உள்ள சருமம் மிகவும் மிருதுவானது. இதனால் கண்களுக்கு அடியில் சீக்கிரமே சுருக்கங்கள் விழுந்து விடுகின்றன. இந்தச் சுருக்கங்கள் விழாமல் இருக்கக் கண்களுக்கு என்று விற்கப்படும் லோஷன் அல்லது கிரீமை வாங்கி இரவில் தடவிக் கொள்ள வேண்டும்.

ண்களில் உள்ள சோர்வை போக்க அடிக்கடி கைக்குட்டை யை குளிர்ந்த நீரில் நனைத்துக் கண்களின் மீது ஒற்றி எடுக்கவேண்டும். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் கால்களை நீட்டி உயரமான இடத்தில் வைத்துப் படுத்துக்கொண்டு கண்களை இரு கைகளாலும் மூடிக்கொள்ள வேண்டும். இப்படியே சிறிது நேரம் படுத்திருந்து ஜன்னல் வழியாக இருட்டை உற்று பார்க்க வேண்டும். வெள்ளரிக்காய்த் துண்டுகள் இரண்டை கண்களின் மீது வைத்துக் கொண்டு அப்படியே சிறிது நேரம் படுத்திருப்பது கண்களுக்கு மிகவும் நல்லது.

ஆரோக்கியமான கண்கள் மற்றும் பார்வையை பெற உணவில் பல்வேறு பழங்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுகளில் உள்ள வைட்டமின்கள், சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் கரோட்டினாய்டுகளை உணவில் சேர்ப்பதன் மூலம் கடுமையான கண் சிக்கல்களை தவிர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com