இளமைக்கு நாங்க கியாரண்டி நீங்க ரெடியா?

Natural beauty tips
beauty tipsImage credit - pixabay
Published on

யசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்னை விட்டு போகல என்று எல்லோரும் உங்களைப் பார்த்து சொல்லனுமா இந்த டிப்ஸைகளை ஃபாலோ பண்ணுங்க!

18 சித்தர்களில் ஒருவரான தேரையர் தன் பாடலில், "பாலுண்போம், எண்ணெய்பெறின் வெந்நீரில் குளிப்போம், பகல் புணரோம், பகல் துயிலோம்" காலன் நம்மை நெருங்காமல் இருக்க வேண்டுமானால் இவ்வாறு சிலவற்றை செய்யவேண்டும் என்று தன் பாடலில் கூறுகிறார். இதற்கான பொருள் பால் உணவை உண்போம். எண்ணெய் தேய்த்து குளிப்போம். பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்ப்போம் என்று என்றும் இளமையுடன் இருக்க பட்டியலிடுகிறார்.

தினந்தோறும் இரண்டு நெல்லிக்கனிகளை ஊறுகாய் எல்லாம் போட்டு சாப்பிடாமல் துருவி தயிரில் கலந்து பச்சடியாகவோ, வேகவைத்து மசித்து ஜூஸாகவோ பருகவும். நெல்லிக்காய் சிறந்த காயகல்பமாக என்றும் நம்மை இளமையுடன் வைத்திருக்க உதவும். நரை திரை மூப்பை தள்ளிப்போட உதவும்.

நெல்லிக்காய் இஞ்சி ஒரு துண்டு சேர்த்து சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர கொழுப்பு கரையும். செரிமான பிரச்னையும் குணமாகும். உடல் "சிக்"கென்று இருக்கும்.

தேன் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர முகச்சுருக்கம் வராமல் காக்கும். கண்களைச் சுற்றியும் தடவ கருவளையம் போகும்.

இஞ்சியை பொடியாக நறுக்கி அல்லது துருவி தேனில் போட்டு இரண்டு மணி நேரம் ஊறவிட்டு தினம் இரண்டு ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வரவும். இதனை மொத்தமாக செய்து வைக்காமல் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரஷ்ஷாக செய்து சாப்பிடவும்.

பழங்களில் அன்னாசி, திராட்சை,ஆரஞ்சு, நாவல் பழம் என தினம் ஒரு ஜூஸ் தயாரித்து பருகவும். தினம் காலையில் வெதுவெதுப்பான நீரில் சிறிது தேன் எலுமிச்சைசாறு கலந்து பருகவும்.

வெண்பூசணி, சுரைக்காய் உடல் சூட்டை குறைப்பதுடன் குடல் புண்ணையும் ஆற்றும். சிறுநீரை பிரித்து வெளியேற்றுவதில் சுரக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. அன்னாசி பழத்தில் நார்ச்சத்து அதிகம் கொழுப்பு சத்து குறைவு. இது பித்தம் ஜீரணக் கோளாறுகளை சரி செய்து தொப்பையை குறைக்கும். தொப்பை இல்லாமல் ஃபிட்டாக இருப்பதே நம்மை இளமையாக காட்டும்.

பப்பாளி பழம் இதனை காலையில் ஒரு கிண்ணம் முழுவதும் எடுத்து சாப்பிட உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி இளமையுடன் வாழ உதவும். பப்பாளி பழத்தை தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வர 19.2% கொழுப்பு சத்து குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
Natural beauty tips

பப்பாளி பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன் படுத்தலாம். பப்பாளியை அரைத்துக் கூழாக்கி முகத்தில் தடவி சிறிது மசாஜ் செய்து மிதமான சுடு நீரில் கழுவ முகம் பளிச்சென மின்னும்.

சப்போட்டா பழம் சாப்பிட்டு வர இளமைக்கு நிச்சயம் கியாரண்டி. தினமும் இரண்டு சப்போட்டா பழத்தை தோல் நீக்கி சாப்பிட்டு வர இதய கோளாறு ஏற்படாமல் தடுப்பதுடன் சருமத்தை மிருதுவாக்கி நல்ல உறக்கத்தையும் ஏற்படுத்தி அழகை கூட்டும். இளமையை தக்க வைக்கும்.

ஆரஞ்சு பழம் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. இதனை சாறு எடுத்து சர்க்கரை சேர்க்காமல் சிறிது தேன் கலந்து சாப்பிட உடலுக்கு புத்துணர்ச்சி தருவதுடன் இளமை தோற்றத்துடனும் இருக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com