
சிலருக்கு வெயிலில் வெளியே சென்று விட்டு வந்தால் முகம், கைகள், கழுத்து கருப்பாகி விடும். அவர்களுக்கு வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே கருமை நிறத்தை நீக்கி பொலிவாக்கிக் கொள்ள உதவும் குறிப்புகளைப் பற்றி இதைப் பதிவில் பார்ப்போம்.
கற்றாழை
கற்றாழையில் 90% அமினோ அமிலங்களும், வைட்டமின் ஏ,பி, சி மற்றும் ஈ ஆகியவையும் அதிகம் உள்ளதால், சருமத்தில் ஏற்படும் கருமை நிறத்தை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழையை தோல், சீவி, உள்ளிருக்கும் வெள்ளை நிற ஜெல்லை நீரில் நன்கு கழுவி விட்டு, இரவில் தூங்கப் போகும் முன்பு கழுத்திலும் முகத்திலும் கை கால்களிலும் தடவிக் கொள்ள வேண்டும். அடுத்த நாள் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும். நான்கைந்து நாட்களில் கருமை நீங்கி, முகமும், தேகமும் பளபளப்பாகும்.
அரிசி கழுவிய தண்ணீர்
இதில் தோல் மற்றும் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் நிறைய இருக்கின்றன. அரிசி கழுவிய தண்ணீரை கை கால்கள் முகம் கழுத்து போன்ற இடங்களில் தடவிக் கொள்ளவும். அல்லது ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து அரிசித் தண்ணீரில் நனைத்து அதை ஒரு ஃபேஸ் பேக்காக போடவும். அரிசி தண்ணீரில் பஞ்சை நனைத்து எடுத்து அதை கழுத்திலும் முகத்திலும் ஒத்தி எடுக்கலாம்.அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவி விடலாம்.
மஞ்சள் தூள்
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், தேன் அரை ஸ்பூன், ஒரு ஸ்பூன் தயிர் மூன்றையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து ஃபேஸ் மாஸ்க் மாதிரி போட்டு 15 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவி விட வேண்டும்.
மாதுளை
மாதுளையின் முத்துக்களை ஜூஸாக்கி அந்த ஜூசை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இருப்பது நிமிடம் கழித்து கழுவிவிடலாம்.
கிரீன் டீ
கிரீன் டீ யில் ஆன்டி ஆக்சிடென்ட்டுகளும், வைட்டமின் சி மற்றும் ஈ இருப்பதால் தோலை நன்றாக வெளுப்பாக்குகிறது. கிரீன் டீ ஃபேஸ் மாஸ்க் போட்டு முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும்
திராட்சை விதை எண்ணெய்
இதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ், வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்திருக்கிறது. கிரேப் சீட் ஆயிலை முகம் கழுத்தில் தடவிக் கொண்டு இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவி விடலாம்.
தக்காளி
தக்காளிப்பழத்தை இரண்டாக நறுக்கி அதை முகம், கைகள், கழுத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவி விட வேண்டும். தேகத்தில் உள்ள கருப்பை விரைவாக எடுத்து விடும் வல்லமை இதற்கு உண்டு.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு, தயிர் கலந்த கலவையையும் அதேபோல முகத்திலும் கழுத்திலும் அப்ளை செய்யலாம். எலுமிச்சை சாறுடன் உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் போலாக்கி பயன்படுத்தினால் சரும நிறம் மாற்றம் அடையும்.
கடலைமாவு + பன்னீர்
ஒரு ஸ்பூன் கடலைமாவு, ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன், அரை ஸ்பூன்சந்தனப்பவுடர், ஒரு துளி மஞ்சள்தூள், ஒரு ஸ்பூன் பன்னீர் என இவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போலாக்கி, கருப்பான இடங்களில் தடவி, இருப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். குறிகிய காலத்திலேயே வெயிலில் கருத்த முகமும் தேகமும் கருமை நீங்கி பளிச்சிடும்.
ஆரஞ்சு ஜூஸ் + தயிர்
3 ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் இரண்டு ஸ்பூன் தயிர், இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்த ஆரஞ்சும், ப்ரோபையாடிக் நிறைந்த தயிரும் கருமையை நீக்குவதில் வல்லமை படைத்தவை.