

ஆப்பிள் பழத்தை சின்னச்சின்னத் துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய்ப்பசை குறையும்.
சருமம் வறண்டும், சுருக்கவுமாக இருந்தால் ஆலீவ் ஆயிலைப்பூசி சிறிது நேரம் ஊறிய பின் சோப்பு போட்டுக்குளிக்க வேண்டும்.
கைமுட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப்போக்க எலுமிச்சைச் சாறைத் தேய்த்து , சோப்பு போட்டு குளித்து வரவேண்டும். கொஞ்சம் நாட்களுக்குள் கறுப்பு நிறம் அகன்றுவிடும்.
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும்.
ஆரஞ்சுப் பழத்தோலை குளிக்கும்போது பயன்படுத்தி தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை வாடைக்கு டாடா சொல்லிவிடலாம்.
தினமும் தேங்காய்ப்பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
இளம் சூடான நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப்போட்டு கண்களைக் கழுவி வர கண்கள் பிரகாசமாக இருக்கும்.
தேநீரை வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத்தூளில் எலுமிச்சைச் சாறைப் பிழிந்து தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி பளபளப்பாக மாறிவிடும்.
வெள்ளரிக்காயை இடித்துச்சாறு எடுத்து சிறிது பாலுடன் கலந்து பஞ்சால் நனைத்து முகத்தில் கீழிருந்து மேலாகத் தேய்த்தால் முகத்தில்இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பிரகாசமடையும்.
தக்காளிப்பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில்லுள்ள எண்ணைய்பசை குறையும்.
எலுமிச்சை ஜுசில் இருக்கும் இயற்கையான அமிலம் வாடை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அளிக்கக் கூடியது.
எனவே எலுமிச்சை ஜுசை உங்கள் அக்குள் பகுதியில் தடவ நல்ல பலன் உண்டு. இது மிக இயற்கையான டியோடரண்ட் ஆகும். அரிப்பு மற்றும் கீறல்கள் உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவும்
ஒரு அளவு ஆப்பிள் சிடார் வினீகருடன் அதே அளவு தண்ணீரைக் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். இதை அக்குள் பகுதியில் ஸ்ப்ரே செய்யுங்கள். இதில் உள்ள வினீகர் பி ஹெச் அளவை சமநிலையில் வைக்கும். மேலும் கெட்ட வாடையை உண்டாக்கும் பாக்டீரியாவை இயற்கை முறையில் அழிக்கும்.
பால், கடலைமாவு, மஞ்சள், சந்தனம் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
பழுத்த வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்துக் கழுவினால் சருமம் மிருதுவாக மாறிவிடும்.