சருமத் தொல்லைகளை நீக்கும் அற்புத மூலிகை: வெள்ளை மஞ்சள்!

Beauty tips in tamil
Beauty tips in tamil
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ஞ்சளைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால், வெள்ளை மஞ்சள் பற்றித் தெரியுமா? பூலாம் கிழங்கைதான் வெள்ளை மஞ்சள் என்பார்கள். இது நறுமணம் கொண்டது. சிறந்த கிருமிநாசினி ஆகும். இது இஞ்சி, மஞ்சள் இரண்டின் குணங்களையும் கொண்டது. 

பாசிப் பயறு, பூலான்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இவற்றைச் சேர்த்து அரைத்துக் குளியல் பொடியாக பயன்படுத்த சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

பூலான் கிழங்குடன் தயிர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்துக் கழுவ முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்  மற்றும் பருக்கள் நீங்கும்.

பூலாங்கிழங்கு பொடியுடன் தேன் கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வெய்யிலினால் ஏற்பட்ட கருமை நீங்கும்.

இதில் கசப்பான சுவையும், மாம்பழம் மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டின் மணமும் கலந்து இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அழகு தரும் அஞ்சறைப் பெட்டி: எளிய வீட்டு வைத்தியங்கள்!
Beauty tips in tamil

வெள்ளை மஞ்சள் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது.

logo
Kalki Online
kalkionline.com