

நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்துப் பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வர, முகம் பளபள என்று மின்னும்.
வெள்ளரிச்சாற்றுடன், சில துளிகள் பசும் பால் கலந்து தடவி வர, முகம் எண்ணெய் வழியாமல் பிரகாசமாக தோற்றம் அளிக்கும். இதை தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற வேண்டும்.
முகச் சுருக்கம் மறைய, முட்டைக்கோஸ் சாறை தினமும் முகத்தில் தடவி வரலாம்.
கை, மார்பு, முகம் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருக்கிறதா? மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து தேமல் உள்ள இடங்களில் தடவி, அரைமணி நேரம் ஊறவைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர உடலின் நிறம் மாறும். தேமல் மறைய ஆரம்பிக்கும். அழகு மேம்படும்.
பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் பூசி பின் குளித்து வந்தால் தோல், மென்மை பளபளப்பு கூடும்.
இரவில் உறங்கச்செல்லும் முன் ஆலிவ் ஆயிலை முகத்தில் தேய்த்துப் படுத்தால் சரும வறட்சி நீங்கி முகம் பொலிவடையும்.
வறண்ட கூந்தல் உடையவர்கள் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி தலையில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு தலைக்குக் குளிக்க வேண்டும். சில நாட்களில் கூந்தல் வறட்சி நீங்கி பள பளக்கும்.
முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் புள்ளிகள் மற்றும் சிறு கொப்புளங்கள் மறையும்.
கொதிக்கவைத்த கேரட் சாற்றினை ஆறிய பின் முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளபாகும்.
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவவேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவவேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.