

ஒரு தேக்கரண்டி கசகசாவை தண்ணீருடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழிவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்
வெள்ளரிக்காயை மிக்ஸியில் அடித்து அதை முகத்தில் தடவி அரைமணி நேரம் அல்லது ஒருமணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
இரவில் படுக்கப்போகும் முன்பு பாலாடையை மஞ்சள் கலந்த முகத்தில் தடவி விட்டு ஒருமணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் மிகவும் வனப்புடன் இருக்கும்.
ஒரு டம்ளர் தேங்காய் எண்ணெய் ஒரு டம்ளர் தேங்காய் பால் இரண்டு கஸ்தூரி மஞ்சள்தூள் பொடி சேர்த்து இவற்றை கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும் இதை தினமும் முகம் உடம்பில் தடவி அரைமணி நேரம் ஊற வைத்த பின் பாசிப்பயறு மாவினால் தேய்த்து குளித்தால் உடல் நல்ல நிறம் ஆகிவிடும்.
குப்பைமேனியிலை மஞ்சள் வேப்பிலை மூன்றையும் அரைத்து முகத்தில் தடவி வைத்து சிறிது நேரம் ஊறவைத்த பின் கழுவினால் முகத்தில் உள்ள தேவை இல்லாத முடி உதிர்ந்துவிடும்.
முகத்தை முதலில் வெந்நீரில் கழுவிய பின் உடனே குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் பிறகு பாசிப்பயறு மாவில் எலுமிச்சைசாறு விட்டு கலந்து முகத்தில் தடவி ஒருமணி நேரம் ஊறவைத்து கழுவினால் பருக்கள் மறைந்துவிடும்.
வேப்பிலை புதினா சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து தூளாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது எடுத்து பாலில் குழைத்து முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறவைத்து குளித்தால் முகப்பரு வராமல் முகம் வெயிலில் கருத்துப் போகாமல் இருக்கும்.
பழுத்த வாழைப்பழத்தை நன்றாக பிசைந்து முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து கழுவினால் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும்.
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறைக்கப்படும். .
பால் கடலை மாவு மஞ்சள் சந்தனம் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் மாறும்.
இரவு படுக்கப்போகும் முன் புதினாச்சாறு இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றுடன் பயத்தம் பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக்கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு குளிக்க முகம் சுத்தமாகும் பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறைந்துவிடும்.
தேங்காய் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
முகம் பளபளப்படைய இரண்டு டீஸ்பூன் கசகசாவை எடுத்து நன்றாக அரைத்து அரைக்கப் தயிரில் கலந்து முகத்தில் தடவி பின்பு அரைமணி நேரம் கழித்து முகத்தை கழுவிவர முகம் பளபளப்படையும்.
வாழைப்பழத்தை நன்றாக மசித்து அரை டம்ளர் பால் சேர்த்து அத்துடன் அரை டீஸ்பூன் தேன் கலந்து இந்த கலவை முகத்தில் பூசி இருபது நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்படையும்.
முகத்தின் கருமை நீங்க வெந்நீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து வரும் ஆவியை முகத்தில் பிடிக்கவேண்டும் இப்படி ஒரு வாரம் செய்து வந்தால் முகத்தில் பொலிவு ஏற்பட்டு பளபளப்பாகும்.
முகத்தில் ஏற்படும் சிறு சிறு புள்ளிகள் நீங்க ஒரு டீஸ்பூன் முள்ளங்கி சாருடன் ஒரு கரண்டி மோர் சேர்த்து முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறவிட்டு பின் வென்னீரால் முகம் கழுவ முகத்தில் ஏற்பட்டுள்ள சிறு சிறு புள்ளிகள் மறைந்துவிடும்.
ஒரு டேபிள் ஸ்பூன் பப்பாளிப்பழ கூழுடன் முல்தானி மட்டி கலந்து முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து இருபது நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ முகம் பொலிவு பெறும்.
முகச்சுருக்கம் நீங்க தொடர்ந்து சில நாட்கள் ஸ்ட்ராபெரி பழத்தை பிசைந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து முகத்தை ஈர துணியால் துடைத்துவிட்டு மீண்டும் ஆப்பிளை நன்றாக கூழாக மசித்து அந்த கூழை முகத்தில் தடவி பின் இருபது நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிட முகச்சுருக்கம் நீங்கி முகம் அழகு பெறும்.