பளபளக்கும் சருமம் இனி சுலபம்! தினமும் ஏபிசி ஜூஸ் குடியுங்கள்!

Glowing skin...
beauty tips in tamil
Published on

மீப காலமாக மிகவும் பிரபலமாக பேசப்படும் டி-டாக்ஸின் ஜூஸ்தான் ஏபிசி ஜூஸ் ஆகும்.

ஏபிசியின் அர்த்தம், ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவை அனைத்தையும் சேர்த்து செய்யப்படுவதாகும்.

இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது மட்டுமில்லாமல் சரும பொழிவையும் ஏற்படுத்தும். அதனால் இது இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலம்.

இந்த ஜூஸில் விட்டமின் ஏ,பி,சி,இ,கே ஆகிய விட்டமின் சத்துக்கள் உள்ளது. இது நம் சருமம் வயதாகுவதை தடுக்கவும், சருமம் நெகிழ்ச்சி தன்மையுடன் இருக்கவும் உதவுகிறது.

ஏபிசி ஜூஸ் செய்யும் முறை:

ஆப்பிள் -2

பீட்ரூட்-1/2

கேரட்-1

இஞ்சி- சிறு துண்டு.

எழுமிச்சை சாறு மற்றும் உப்பு தேவைக்கேற்ப எடுத்து கொள்ள வேண்டும்.

ப்பிள், பீட்ரூட், கேரட்டை சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸ் செய்து கொள்ளவும். இத்துடன் சிறிய துண்டு இஞ்சியையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்பு நன்றாக வடிக்கட்டிய பின்பு சிறிது உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து கொண்டால், ஏபிசி ஜூஸ் ரெடி.

ஏபிசி ஜூஸை தினமும் அருந்தலாமா?

ந்த ஜூஸை தினமும் குடிப்பதனால் சரும பொழிவு ஏற்படுவது மட்டுமில்லாமல் நல்ல செரிமானத்திற்கும் உதவும். உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
இயற்கை முறையில் ஆரோக்கியம் மற்றும் அழகு ரகசியங்கள்!
Glowing skin...

இந்த ஜூஸை எப்படி சேமித்து பயன்படுத்துவது?

ந்த ஜூஸை ஏர் டைட் கன்டெயினரில் சேமித்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டும். அதிகப்பட்சமாக 72 மணி நேரம் வரை வைத்து பயன்படுத்தலாம். காலையில் வெறும் வயிற்றிலோ அல்லது இரவிலோ குடிக்கலாம்.

உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர் களுக்கு இந்த பழச்சாறு ஒரு வரப்பிரசாதமாகும், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

இந்த ஜூஸை தொடர்ந்து அருந்தி வந்தால் அதனால் ஏற்படும் பலனை இரண்டு வாரம் முதல் ஒரு மாதத்திற்குள் கண்கூடாகக் காணமுடியும்.

-நான்சி மலர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com