

வாரம் ஒருமுறை கருவேப்பிலையை அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் முடி கருகருவென வளரும்.
புருவத்தில் தினமும் காலையில் அரை தேக்கரண்டி பால் ஆடை தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.பின்னர் சிறிது விளக்கெண்ணைய் எடுத்து அழுத்தமாக இருபது தடவை மசாஜ் செய்தால் புருவம் அடர்த்தியாக வளரும்.
வேப்பங்கொழுந்தை மைபோல அரைத்துச் சில சில சொட்டு நல்லெண்ணெய் சேர்த்து பருக்கள் மீது தடவி வர பருக்கள் சீக்கிரம் மறையும்.
காய்ந்த எலுமிச்சையைத் துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டுத் தூளாக்கிக்கொள்ளவும். முகம் கழுவுவதற்கு பத்து நிமிடம் முன் இப்பொடியை சிறிதளவு எடுத்து பாலுடன் சேர்த்து, முகத்தில் பூசி ஊறியபின் முகம் கழுவினால் முகம் பளிச்சென்று ஆகிவிடும்.
சீகைக்காய், வெந்தயம் இவற்றுடன் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் பூந்திக் கொட்டையையும் சேர்த்து அரைத்துக் குளிக்க அது தலைமுடிக்கு ஒரு சிறந்த கண்டீஷனிங்போல செயல்படும்.
ஸ்நானப்பொடி தயாரிக்கும்போது சிறிது குப்பைமேனி இலைகளையும், காயவைத்து இடித்துச் சேர்த்துக் கொள்ளவும். எவ்வித தோல் வியாதிகளும் நெருங்காது.
பச்சைப் பயிறை அரைத்து மாவாக்கி அதனுடன் சலித்து எடுத்த கோதுமைத்தவிட்டைக் கலந்து தேய்த்துக் குளித்தால், தோலில் இருக்கிற கரும்புள்ளிகள் நீங்கி தோல் பளபளப்பாக இருக்கும்.
இளம் நரைக்கு பித்தம்தான் முக்கிய காரணம். கவலையும், மனச்சோர்வும் தலையை பலவீனப்படுத்தி நரையை ஏற்படுத்தும். அதிகம் காபி, டீ பருகினால் பித்தம் ஏற்படும்.
கோரைக்கிழங்கை வாங்கி அரைத்து, குளிக்கும்போது உடம்பில் பூசிக்குளித்தால், தேவையில்லாத பகுதிகளில் வளரும் ரோமம் உதிரும். கைகால்கள் பளபளப்பாகவும் இருக்கும்.
பழுத்த பப்பாளிப்பழத்துண்டில் ஒன்றை எடுத்து முகம், கழுத்துப் பாதப்பகுதிகளில் தேய்த்துக்கழுவினால் வறண்ட தேகம் மினு மினுக்கும்.
வாரத்தில் ஒரு நாள் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை யை அரைத்து உருண்டையளவு சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.
சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து, அரைத்துக் கிடைக்கும் விழுதை முகத்தில் தொடர்ந்து தடவி வந்தால் முகப்பரு மறைந்துவிடும்.