
கிராம்பில் யூஜினால் என்ற பொருள் கொலாஜனை ஊக்குவிக்கும் பண்பு உள்ளது. இந்த கிராம்பில் ஜெல் தயாரித்து இயற்கை அழகைப் பெறலாம்.
தேவையானவை:
பொடி செய்த கிராம்பு. ஒரு டேபிள்ஸ்பூன்
ஆலோவேரா ஜெல். 6 டேபிள் ஸ்பூன்
ஆளிவிதை. ஜெல் 2டேபிள் ஸ்பூன
தேன் ஒரு டீஸ்பூன்
வைட்டமின் ஈ காப்ஸ்யூல் 2
ரோஸ் வாட்டர் 2டீஸ்பூன்
மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்
க்ளிசரின் ஒரு டீஸ்பூன்
தயாரிப்பு:
முதலில் கிராம்பை 30 மிலி நீர் சேர்த்து 5நிமிடம் கொதிக்க விடவும். இதை நன்கு வடிகட்டி வைக்கவும்.
ஒரு பௌலில் ஆலோ வேரா ஜெல் மற்றும் ஆளிவிதை ஜெல் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
இதில் தேன் ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிசரின் சேர்த்துக் கலக்கவும். மஞ்சள்தூள் சேர்க்கவும். பிறகு இதில் ஈ ஆயில் மற்றும் வடித்து வைத்த கிராம்பு டிகாக்ஷனை சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு கலந்து வைக்கவும்.
இதை ஃப்ரிட்ஜ் ஜில் ஒரு கண்ணாடி பாட்டிலில் 12 மணி நேரம் வைக்கவும்.
இரவில் முகத்தைத் கழுவி ரோஸ் வாட்டர் தடவி பிறகு இந்த ஜெல்லிருந்து ஓரு பட்டாணி அளவு எடுத்து முகத்தில் மசாஜ் செய்யவும். காலையில் வேறு வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
இதன் பயன்கள்:
கிராம்பு, மஞ்சள் பொடி மற்றும் ஈ ஆயில் முகச்சுருக்கத்தை நீக்கி மென்மையாக்கும்
க்ளிசரின் நல்ல நீரேற்றத்தைத்தரும். ஆலோவேரா மற்றும் ஆளிவிதை ஜெல் ஈரப்பதத்தைத் தரும். இதனால் முகம் எந்தவித மாசுமருவின்றி இருக்கும்.
ஆலோவேரா மற்றும் ஆளிவிதை ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்த கிராம்பு இவைகள் இணைந்து கொலாஜனை அதிகரிக்கச் செய்யும்.
மஞ்சளின் குர்குமின் மற்றும் கிராம்பில் யூஜினால் முகச் சுருக்கம் மற்றும் வயதான தோற்றத்தைத் தடுக்கும்.
ரோஸ் வாட்டர் முகத்தில் பளபளப்பு தரும். முகத்திற்கு நல்ல பொலிவைத்தரும். ப்ளீச் செய்ததுபோல் முகம் திகழும்.
மேலும் இந்த கிராம்பு ஜெல் வறண்ட மற்றும் எண்ணைப்பசையுள்ள சருமம் உள்ளவர்களுக்கும் சிறந்தது. கடையில் வாங்குவதை விட சிக்கனமானது.
எந்தவித கெமிகல் கலப்பு இல்லாமல் இயற்கையானதால் பக்க விளைவுகள் ஏற்படுத்தாது.
கிராம்பு ஜெல் பயன்படுத்தி உங்கள் இயற்கை அழகை மெருகூட்டலாம். இது ஒரு இயற்கை போடாக்ஸ் ஆகும்.