
இளமையாக இருக்க இயற்கை க்ரீமை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம் பார்ச்லி கீரையில் வைட்டமின் சி சத்தும் முகக் கோடுகளை நீக்கும் பொட்டாசியம் சத்து க்களும் உள்ளன. எலுமிச்சையின் சி சத்து முகத்திற்கு பளபளப்பு கொடுக்கும் ஓட்ஸ் இறந்த செல்களை நீக்கி எக்ஸ்ஃபோலியேட் செய்யும்.
க்ரீம் தயாரிக்க:
பார்ச்லி இலைகள் ஒரு கைப்பிடி
எலுமிச்சை ஜுஸ் 1 டேபிள்ஸ்பூன்
பொடி செய்யப்பட்ட ஓட்ஸ் 2 டேபிள் ஸ்பூன்
ஆலோவேரா ஜெல் 1டேபிள் ஸ்பூன்
பாதாம் ஆயில் 1டேபிள்ஸ்பூன்
தண்ணீர் அரை கப்
பார்ஸ்லி கீரையை அரைக்கவும் அரை கப் தண்ணீரில் சேர்த்து ஏழு நிமிடம் கொதிக்கவைத்து ஆறவைக்கவும்.
ஒரு பௌலில் ஓட்ஸ் பௌடர் மற்றும் குளிர்ந்த பார்ஸ்லி கீரை அரைத்த விழுதை சேர்க்கவும். எலுமிச்சை ஜுஸையும் சேர்க்கவும். இதில் ஆலோவேரா மற்றும் பாதாம் ஆயில் சேர்த்து நன்கு கலக்கவும். இதை ஒரு பாட்டிலில் வைத்து ஃப்ரிட்ஜ்ஜில் 7 நாட்கள் வைக்கவும்.
பயன்பாடு:
முகத்தைக் கழுவி மேற்கூறிய க்ரீமை முகத்தில் மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் வைத்து காலையில் கழுவவும். வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் முகக்கோடுகள் சுருக்கங்களை நீக்கும்.
கருமை நீங்கும். முகம் ஈரப்பதத்துடன் இருக்கும். அழற்சியைப் போக்கும்.
இது இயற்கை போடாக்சாக (botox) செயல்பட்டு முகத்தைப் பொலிவாக்கும்.
வாசலீன் மற்றும் பேபி ஆயில் க்ரீம்.
ஒரு டீஸ்பூன் வாசலீனுடன் 2டீஸ்பூன் பேபி ஆயிலுடன் கலந்து ஒரு பாட்டிலில் வைக்கவும்.
மாலை வேளையில் மேற்கூறிய க்ரீமை முகத்தில் தடவி மறுநாள் காலை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பேபி ஆயில் முகத்தை மென் மையாக்கும். இந்த இரண்டும் முகத்தை ஈரப்பதத்துடன் வைக்கும். முகமும் பளபளக்கும்
காலை நேர க்ரீம்
தேவை:
பாதாம் பருப்பு 6
ரோஜா இதழ்கள் அரை கப்
பீட்ரூட் ஜுஸ் 4 டீஸ்பூன் கள்
ஆலோவேரா ஜெல் ஒரு டேபிள் ஸ்பூன்
ஈஆயில் 6 சொட்டுகள்
பாதாமை முதல் நாள் இரவு ஊறவைக்கவும். மறுநாள் தோலை எடுத்து அரைத்து வைக்கவும்.
ரோஜா இதழ்களையும் பீட்ரூட் ஜுசும் சேர்த்து நன்கு கலக்கவும். இதை வடிகட்டவும்.
ஆலோவேரா ஜெல்லை ஒரு பௌலில் எடுத்து அதில் வடிகட்டிய பாதாம் பீட்ரூட் ரோஜா கலவையில் 2 டீஸ்பூன் மற்றும் ஆயில் சேர்த்து கலக்கவும்.
இந்த க்ரீமை காலையில் முகத்தில் தடவிக்கழுவ முகம் ஈரப்பதத்துடன் மிகுந்த பொலிவுடனும் காணப்படும். காலை நேரத்திற்கு பயன்படுத்த சிறந்த க்ரீம். முகம் கண்ணாடி போல் ஜொலிக்கும்.