பெண்களின் இடுப்பின் வனப்புக்கு இயற்கை வழிகள்!

Natural ways for women's hips!
Azhagu kurippugal...
Published on

பெண்களின் இடுப்பு அழகு பெரும் சவாலாக இருப்பது பாவாடை நாடாத் தழும்பு...

இதற்கு வெள்ளை எள், கசகசா, பயத்தம்பருப்பூ மூன்றையும் சமமாக எடுத்து மிஷினில் அரைத்துக் கொள்ளவும். இதை சூடான நீரில் குழைத்து இந்த பேஸ்டை தடவிக் குளிக்க இடுப்பு கருமை மறைந்து இடுப்பு அழகு பெறும்.

பெண்கள் உடை அதிகரிக்கும்போது தொடைகளில் வரி வரியாகக் கோடுகள் விழும். இதற்கு வெட்டிவேர் 20 கிராம், பார்லி 100 கிராம், வெள்ளரி விதை 100கிராம் எடுத்து மாவாக்கி அதில் கஸ்தூரி மஞ்சள் தேங்காய்பால் சேர்த்து தடவ கோடுகள் மறையும்.

பெண் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறையாவது  உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து பொடி செய்து வெல்லம் நெய் கலந்து சாப்பிடச் செய்வதால் இடுப்பு பலம் பெறும்.

சில பெண்களுக்கு இடுப்பில் டயர் டயராக  மடிப்பு விழுந்திருக்கும். குறிப்பாக பிரசவித்த பெண்களுக்கு இப்படி ஆகும். இவர்கள் நான்கு  வெற்றிலையை அரைத்து அதில் வெல்லப் பாகு சேர்த்து அருந்த தேவையான கால்ஷியம் கிடைக்கும். வாழைத்தண்டு  ஜுஸ்அவர்கள் அருந்திவர இடுப்பு சிக்கென ஆகும்.

இடுப்புக்கான ஹிப் பேக், உளுத்தம்பருப்பு பொடி, அன்னாசிச் சாறு, கற்றாழையின் சோற்றுப்பகுதி இம்மூன்றையும் 2 டீஸ்பூன் எடுத்து  அதில் சந்தனத்தூள் சேர்த்து இடுப்பில் தடவி குளிக்க இடுப்பு தந்தம்போல் ஆகும்

வாரம் இருமுறை  வெள்ளை முள்ளங்கி மற்றும்  எலுமிச்சை சாறு சேர்த்து ஜுஸ் குடித்துவர கொழுப்பு குறையும்

ஜவ்வரிசி பார்லி கோதுமை மூன்றையும் சம அளவில் எடுத்து மாவாக்கி சுடுநீரில் இப்பொடியைக் கலந்து இடுப்பில் பூசி குளித்து இடுப்பு வனப்பாகும்.

சருமத்தின் சுருக்கம் நீங்க

சிலருக்கு உதடு மற்றும் நெற்றியில் சுருக்கம் இருக்கும். பால், தயிர், வெண்ணெய், நெய்  இவற்றில் ஏதாவது ஒன்றை அடித்து  மென்மையாக்கி முகத்தில் தடவி கழுவ சுருக்கம் நீங்கும்.

சில பெண்களுக்கு இடுப்பில் டயர் டயராக  மடிப்பு விழுந்திருக்கும். குறிப்பாக பிரசவித்த பெண்களுக்கு இப்படி ஆகும். இவர்கள் நான்கு  வெற்றிலையை அரைத்து அதில் வெல்லப் பாகு சேர்த்து அருந்த தேவையான கால்ஷியம் கிடைக்கும். வாழைத்தண்டு  ஜுஸ்அவர்கள் அருந்திவர இடுப்பு சிக்கென ஆகும்.

இதையும் படியுங்கள்:
சரும நோய்களைப் போக்கி மேனியைப் பாதுகாக்கும் மணக்கும் மல்லி..!
Natural ways for women's hips!

இடுப்புக்கான ஹிப் பேக், உளுத்தம்பருப்பு பொடி, அன்னாசிச் சாறு, கற்றாழையின் சோற்றுப்பகுதி இம்மூன்றையும் 2 டீஸ்பூன் எடுத்து  அதில் சந்தனத்தூள் சேர்த்து இடுப்பில் தடவி குளிக்க இடுப்பு தந்தம்போல் ஆகும்.

வாரம் இருமுறை  வெள்ளை முள்ளங்கி மற்றும்  எலுமிச்சை சாறு சேர்த்து ஜுஸ் குடித்துவர கொழுப்பு குறையும்.

ஜவ்வரிசி பார்லி கோதுமை மூன்றையும் சம அளவில் எடுத்து மாவாக்கி சுடுநீரில் இப்பொடியைக் கலந்து இடுப்பில் பூசி குளித்து இடுப்பு வனப்பாகும்.

சருமத்தின் சுருக்கம் நீங்க

சிலருக்கு உதடு மற்றும் நெற்றியில் சுருக்கம் இருக்கும். பால், தயிர், வெண்ணெய், நெய்  இவற்றில் ஏதாவது ஒன்றை அடித்து  மென்மையாக்கி முகத்தில் தடவி கழுவ சுருக்கம் நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com