கரும்புள்ளிகளை அகற்ற...
கரும்புள்ளிகளை அகற்ற...pixabay.com

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவும் அழகு குறிப்புகள்!

மாறிவரும் சுற்றுச்சூழல் சூழ்நிலைகள், ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள், பரபரப்பான வாழ்க்கை முறை, சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள், காற்று மாசுபாடு ஆகியவற்றின் காரணமாக முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன. இது முக அழகை பாதிக்கிறது.

இந்தக் கரும்புள்ளிகளை சிலர் நகங்களால் கிள்ளி எடுப்பார்கள். இதனால் முக அழகு மேலும் கெடும். அதை தவிர்த்து விட்டு பின்வரும் இந்த எளிய வீட்டு குறிப்புகளைப் பின்பற்றி கரும்புள்ளிகளை எப்படி அகற்றுவது என்று பார்க்கலாம்.

1. வாழைப்பழத்தை உண்டு விட்டு அதன் தோலை தூக்கி எறியாமல் முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் வாழைப்பழத் தோலை வைத்து தேய்க்க வேண்டும். இதனால் கரும்புள்ளிகளின் எண்ணிக்கை விரைவில் குறையும்.

2. கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் சுத்தமான தேனை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும். இது முகத்தில் அதிகப்படியான கருப்பு நிறமியை உற்பத்தி செய்வதை தடுக்கும்.

3. மஞ்சள்; நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கும் மஞ்சள் சருமத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும் ஒரு பொருளாகும். சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளை குழைத்து அதை கரும்புள்ளிகள் உள்ள இடத்திலும் முகத்தின் மற்ற பகுதிகளிலும் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும். தினமும் இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் விரைவில் மறைந்துவிடும்.

4. முட்டையின் வெள்ளைக் கரு;   முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வரவும்.

இதையும் படியுங்கள்:
இந்தியர்களிடம் பிரபலமான தென் கொரிய உணவு வகைகள்!
கரும்புள்ளிகளை அகற்ற...

5. கற்றாழை ஜெல்

கற்றாழையை எடுத்து அதன் தோல் சீவி முட்களை செதுக்கி உள்ளிருக்கும் ஜெல்பகுதியை மட்டும் எடுத்து தண்ணீரில் நன்றாக அலசிக் கொள்ளவும். இதில் சிறிதளவு அரிசி மாவு கலந்து இந்த பேக்கை முகம் நன்றாக தடவ வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து இதை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வரவும். முகம் பளபளப்பாகும் கரும்புள்ளிகளும் விரைவில் நீங்கும்.

6. முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி சிறிதளவு எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் கலந்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும் இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றி பளபளப்பாகவும் வைக்கும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com