
இன்று கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் முதல் விழாக்களுக்கு என தங்களை அழகாக்கிக் கொள்ளவே அனைவரும் விரும்புகிறார்கள். மேக்கப் போட நேரமில்லை, விரும்பாதவர்கள் கூட ஃபேஸ் வாஷ் பண்ணிவிட்டு சிம்பிளான லோஷன், ஐ மேக்கப் பண்ணிக் கொள்வதையே விரும்புவர். ஐ ஷேடோவை தேர்ந்தெடுத்து சிம்பிளாக நீட் ஆக போட்டு கொண்டாலே முக அழகு கூடிவிடும்.
மேக்கப் ல் முக்கிய அம்சம் கண்களுக்கான மேக்கப்தான். கண்களை அழகாக எடுத்துக் காட்ட கண்களுக்கு காஜல் போடுவது, ஐ லைனர் போடுவது, புருவங்களை திருத்தி பென்சிலால் ஷேப் செய்வது என பல இருந்தாலும் சிம்பிளான ஐ ஷேடோ போட்டு கொள்வது கண்களை அழகாக எடுத்துக்காட்ட உதவும்.
ஐ ஷே டோக்களை பொருத்தவரை மேட் ஐ ஷேடோ, ஷிம்மரி, கிரீம், கிளிட்டர் என நான்கு வகைகளில் கிடைக்கிறது. ஐ ஷே டோ தன்மையைப் பொறுத்து பவுடர், க்ரீம், காம்பாக்ட் பவுடர்தான் வகைகள். பெரும்பாலும் ஆயில் சருமம் கொண்டவர்கள் கிரீம் ஐ ஷே டோக்களை தவிர்க்க வேண்டும். கிரீம் ஆயில் சருமத்தில் மேற்கொண்டு ஆயில் தன்மையை அதிகப்படுத்திவிடும்.
அதேபோல் கிரீம் ஐ ஷேடோக்கள் சாதாரண சருமம் அல்லது வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்திட நல்ல க்ளோவான சருமம் கிடைக்கும். எத்தனை வகை, எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும் பொதுவாக மேட் மற்றும் கிளிட்டர்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். மேட் ஐ ஷேடோ கண்களை கண்களுக்கும், புருவத்துக்கும் இடைப்பட்ட குழிவான பகுதியில் பயன்படுத்தி ஹைலைட் செய்துவிட்டு கிளிட்டர் ஷேடோக்களை கண் இமை மேலே பளபளவென தெரியுமாறு போட்டு கொள்ளலாம்.
மேட் ஐ ஷேடோக்களை ஐ லைனர், காஜல் பயன்பாட்டிற்கு முன் பயன்படுத்தலாம். கண்கள் பிரைட்டாக பளிச்சென தெரியும். ஷிம்மர் அல்லது கிளிட்டர் ஐ ஷேடோ களை பார்ட்டி,விழாக்கள், திருமணம் இப்படியான நிகழ்வுகளுக்கு பயன்படுத்தினால் கிராண்ட் லுக் கிடைக்கும்.
இதில் சிலர் மேக்கப் போட்ட லுக்கே வேண்டாம் என்பர். அவர்களுக்கு ஸ்கின் கலரிலேயே ஐ ஷேடோ போடலாம். இவைகள் மட்டுமல்லாமல் ஸ்மோக்கி ஐ ஷேடோ லுக் கொடுக்க தனி ஷேடோ பேலட்டுகள் உள்ளன. கண்களை சுற்றிலும் கருமை நிற புகை மூட்டம் போன்ற எஃபெக்ட் கொடுக்கும் கேட் ஐ மேக்கப் ம் பிரபலம்.
ஸ்மோக்கி ஐ மேக்கப்களுக்கு லிப்ஸ்டிக் கலரில் லைட் கலர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சின்ன கண்கள் கொண்டவர்கள் ஸ்மோக்கி ஐ ஷேடோ மேக்கப்பை தவிர்க்க வேண்டும். எப்பொழுதும் நல்ல பிராண்ட் உள்ளவற்றை உபயோகிக்க மேக்கப் நன்றாக இருக்கும். டாப் பிராண்ட் கள் விலை அதிகமெனில் மற்ற தரமான பரிச்சயமான பிராண்ட் பொருட்களை உபயோகிக்க அலர்ஜி, எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படாது.
கலர் நிலைத்து நிற்கும். ஐஷேடோக்களை, கலர் பேலட்களை நாமே வாங்கி வைத்துக் கொள்ளலாம். மூன்று கலர் அடங்கிய பேலட்டுகள் கருப்பு, பிரவுன், அடர் பிரவுன் என கிடைக்கும். லைட் கலரிலும் பேலட் களை வாங்கி உபயோகிக்கலாம். எந்த மேக்கப் என்றாலும் முறையாக தெரிந்து கொண்டு அழகாக போட முகம் வசீகரிக்கும். மேக்கப் ஐ முறையாக நீக்கி சருமத்தை பாதுகாப்பதும் அவசியம்.