
பொதுவாக கருப்பு நிற ஷூக்களைத்தான் உலகம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பி அணிகிறார்கள். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் நான்காம் தேதி அன்று பிரவுன் நிற ஷூக்களை அணியும் நாளாக கொண்டாடுகிறார்கள். ஒரு காலத்தில் பிரவுன் நிறக் காலணிகள் மதிப்புக் குறைவானதாக கருதப்பட்டது. ஆனால் உலகெங்கிலும் தற்போது பிரவுன் நிறக் காலணிகளை மக்கள் விரும்பி அணியத் தொடங்கிவிட்டார்கள். பிரவுன் நிறக் காலணிகள் அணிவதன் தனித்துவத்தை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பழங்காலத்தில் ஷூக்கள் பதனிடப்பட்ட தோலால் செய்யப்பட்டன. அவை பிரவுன் நிறத்தில் இருந்தன. காலப்போக்கில் மக்கள் கருப்பு மற்றும் பிற வண்ணச் சாயங்களை கண்டுபிடித்தனர். பிரவுன் நிறக் காலணிகள் கருப்புக் காலணிகளை விட குறைவான மதிப்பு மிக்கதாக மாறியது. ஏனென்றால் அவை பெரும்பாலும் அழுக்கு மற்றும் மண்ணில் வேலை செய்யும் கிராமப்புற மக்களால் அணியப்பட்டன. நகரத்தில் வாழ்பவர்கள் கருப்பு நிற ஷூக்களை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
அமெரிக்கர்கள் பிரவுன் நிற ஷூக்களின் தனித்துவத்தை உலகிற்கு அறிவிக்கும் பொருட்டு டிசம்பர் நான்காம் தேதியை பிரவுன் நிற ஷூக்களை அணியும் நாளாக அனுசரிக்கின்றனர். இது பிரவுன் நிற காலணிகளின் நேர்த்தியையும் பன்முகத்தன்மையையும் பாராட்டுவதில் கவனம் செலுத்தும் ஒரு தனித்துவமான கொண்டாட்டமாகும். இந்த நாளில் வழக்கமாக அணியும் ஷூக்களை விடுத்து பிரவுன் நிற ஷூக்களை அணிகிறார்கள்.
பிரவுன் நிற ஷூக்களின் தனித்துவம்;
பன்முகத்தன்மை;
இவை நேர்த்தியும் பன்முகத்தன்மையும் கொண்டவை. பிரவுன் நிற ஷூக்கள் எந்த ஆடைகளுடனும் நன்றாகப் பொருந்துகிறது. எனவே கருப்பு நிற ஷூக்களுக்குப் பதிலாக பிரவுன் நிற ஷூக்களை அணியலாம். இவை ஒரு பணக்கார அடையாளத்தை கொண்டுள்ளன. திருமணம் போன்ற நிகழ்வாக இருந்தாலும் அல்லது தினசரி அணியும் சாதாரண உடையாக இருந்தாலும் பிரவுன் நிற ஷூக்கள் பொருத்தமாக இருக்கின்றன. ஷாப்பிங் செல்லும் போதும் இதை அணிந்து கொள்ள வசதியாக இருக்கும். ஸ்டைலிஷ் ஆகவும் தோற்றமளிக்கும்.
ஃபேஷனபிள் லுக்;
டார்க் சாக்லேட்டை நினைவுபடுத்தும் இவை குழந்தைகளுக்கும் பிடித்தமான நிறத்தில் இருக்கின்றன. இவை எல்லா காலத்திலும் அணிந்து கொள்ள ஏற்றதாக ஃபேஷனபிளாக இருக்கின்றன. லூசான பேண்ட், டெனிம் பேண்ட் அல்லது சாதாரண பேண்ட் சட்டைக்கும் மேட்ச் ஆக இருக்கிறது. ஒட்டுமொத்த அலங்காரத்தையும் மேம்படுத்துகிறது. இவற்றில் அழுக்கு பட்டாலும் அது வெளியில் தெரியாது. அதனால் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற சிறந்த தேர்வாக இருக்கும்.
உளவியல் விளைவு;
பிரவுன் நிறம் ஒரு உளவியல் விளைவைக் கொண்டிருக்கிறது. அதாவது இது ஆறுதல் மற்றும் நிலைத்தன்மையை குறிக்கிறது என்று உளவியல் கூறுகிறது. எனவே இவற்றை அணிந்து கொள்ளும் போது மனம் அமைதியாகவும் ஆறுதலாகவும் இருக்கும்.
ப்ரொபஷனல் லுக்;
இது ஒரு ப்ரொபஷனல் லுக்கைத் தருகிறது. மருத்துவர்கள், எஞ்சினியர்கள், அலுவலக உயர் அதிகாரிகள் போன்றவர்கள் அணியும் போது அதன் மதிப்பு கூடுகிறது. நவநாகரீகத் தோற்றமும், திருப்தியும் தருகிறது. கோட் சூட் மற்றும் ஜீன்ஸ் உடனும் அணிந்து கொள்ளலாம்.
17 ஷேடுகள்;
பிரவுன் நிற ஷூக்களில் 17 வெவ்வேறு ஷேடுகள் உள்ளன என்பது ஆச்சரியமான விஷயம். லைட் டான், ஒட்டகம், செஸ்நெட், மஹோகனி, சாக்லேட் மற்றும் எக்ஸ்பிரஸோ போன்ற பல்வேறு ஷேடுகளில் வருகின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு பாணியையும் சம்பிரதாயத்தையும் வெளிப்படுத்தும். உதாரணமாக பழுப்பு மற்றும் ஒட்டகம் போன்ற இலகுவான ஷேடுகள் பெரும்பாலும் சாதாரணமாக தோற்றமளிக்கின்றன. சாக்லேட் மற்றும் எக்ஸ்பிரஸோ போன்றவை பல்துறை சார்ந்ததாக இருக்கும். செம்பருத்தி போன்ற சிவப்பு பழுப்பு அல்லது வால்நட் போன்ற ஆழமான ஷேடுகள் வெவ்வேறு சந்தர்ப்பங்கள் மற்றும் தனிப்பட்ட பாணிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகின்றன.