
ஆண். பெண் இருபாலருக்குமே எண்ணெய் பசை முகத்தில் வழிவது பிரச்னையை தரும். முகப்பொலிவை கெடுக்கும். இந்த எண்ணை பசையை முகத்தில் இருந்து எப்படித்தான் நீக்குவது? ஏதேதோ செய்தாச்சு என அடுத்து போன உங்களுக்கு இதோ அட்டகாசமான 8 டிப்ஸ்கள் இப்பதிவில்.
எண்ணெய் பசையுள்ள சருமம் பார்ப்பதற்கு பளபள என்று தோற்றமளித்தாலும் விரைவில் தூசியும், அழுக்கும் சேர்ந்துவிடும். இதனால் இவ்வகை சருமம் உடையவர்களுக்கு அதிக எண்ணை பசை காரணமாக முகப்பருக்களும் வரக்கூடும்.
ஆதலால் முகத்தை அடிக்கடி கழுவினால்தான் சுத்தமாய் இருக்கும். இந்த வகை சருமம் உடையவர்கள் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுதல் கூடாது. பழங்கள், பால் மற்றும் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வரவேண்டும்.
எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கான பராமரிப்பு:
தேன், ஆரஞ்சுப் பழச்சாறு, ரோஸ் வாட்டர், முல்தாணி, மட்டித்தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றும்தலா ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பேக் போட்டு நன்கு காய்ந்த பின்பு கழுவி வர சருமம் பொலிவு பெறும்.
வெள்ளரிச்சாறு 4 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு 1 தேக்கரண்டி இம்மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர பருக்கள் மறைவதோடு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.
எண்ணெய் பசையுள்ள சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருக்கும். இதற்கு தக்காளிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்து அத்துடன் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து பேக் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவி வர துவாரங்கள் இறுக்கமாகும் .
முட்டையின் வெள்ளைக்கரு ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு சில துளிகள் மூன்றையும் நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர சருமத் துவாரங்கள் இறுக்கமாவதோடு நல்ல நிறத்தையும் கொடுக்கும்.
நன்றாக பழுத்த வாழைப்பழத்தில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றை கலந்து நன்றாக மசித்து பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவவேண்டும்.
நன்கு பழுத்த பப்பாளிப் பழுத்தை நன்றாக மசித்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர அதிகமாக எண்ணை சுரப்பதை கட்டுப்படுத்துவதோடு நல்ல போஷாக்கையும் தருகிறது.
மோரை பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்தில் தேய்த்துவர துவாரங்கள் விரைவில் மறையும்.
ஈஸ்ட் 1 தேக்கரண்டி, பால் 4 தேக்கரண்டி, சர்க்கரை 1 தேக்கரண்டி மூன்றையும் நன்றாக கலந்து 10 நிமிடங்கள் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.