பீட்ரூட் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும்தான்!

பீட்ரூட்
பீட்ரூட்

பீட்ரூட் சரும பராமரிப்பில் பெரிய மாற்றத்தையும் புத்துணர்ச்சியூட்டும் நிறத்தையும் கொடுக்கிறது. காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடும் போது அவை உள்ளிருந்து ஆரோக்கியமாக மாற்றும். ஆரோக்கியம் அதிகம் தரும் சூப்பர் உணவுகளில் பீட்ரூட்டும் ஒன்று.

பீட்ரூட்டின் இரும்பு மற்றும் ஃபோலேட் சிறந்த ரத்த ஓட்டத்துக்கு முக்கிய பங்களிக்கிறது அதனால் நமது சருமத்திற்கு ஆரோக்கியமான மற்றும் இயற்கையான பளபளப்பை உள்ளிருந்து அளிக்கிறது.

பீட்ரூட்டில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடவும் முகப்பருவால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கும் உதவுகிறது. அதனால் இது தெளிவான சருமத்திற்கு வழி வகுக்கிறது.

பீட்ரூட்டில் உள்ள இயற்கையான பொட்டோலைன் நிறமிகள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை குறைக்க உதவுகிறது மேலும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த மிகவும் உதவியான ஒன்றாக உள்ளது.

பீட்ரூட் அதிக நீர் உள்ளடக்கத்துடன் நமது சருமத்தின் நீர் ஏற்றமாக வைத்திருக்க உதவுகிறது சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்கிறது மற்றும் மென்மையான சருமத்தை ஊக்குவிக்கிறது..

இரண்டு பங்கு பீட்ரூட் சாறுடன் ஒரு பங்கு தண்ணீரை கலந்து தடவினால் தோலில் ஏற்படும் அரிப்பு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

இயற்கையான பளபளப்புக்கு...
இயற்கையான பளபளப்புக்கு...

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

வாரத்திற்கு இரண்டு முறை பீட்ரூட் சாறுடன் தேன் மற்றும் பால் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் நீங்கி வயதான தோற்றம் மறையும்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள் பீட்ரூட் ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும் .ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பீட்ரூட் உடலில் உள்ள ரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும் கண்களுக்கு பார்வைத் திறனை அதிகரிக்கிறது.

பீட்ரூட் சாறு செரிமான கோளாறு நீக்கும் ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ள ரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

பீட்ரூட் சாப்பிடுவது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது .இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதன் மூலம் அடிக்கடி ஏற்படும் மறதியை தடுக்கலாம்.

கர்ப்பிணி பெண்கள்  மற்றும் வயிற்றில் வளரும் சிசுவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் யாவும் பீட்ரூட்டில் நிறைந்துள்ளன. இது வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளின் ஆபத்தை குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் மறைந்து தோன்றும் கடற்கரை எங்குள்ளது தெரியுமா?
பீட்ரூட்

உடலில் கால்சியம் சத்துக்கள் குறைவதால் எலும்புகள் பலவீனம் அடையலாம். பெரும்பாலான பெண்களும் கால்சியம் பற்றாக் குறையினால் அவதிப்படுகிறார்கள் இந்த நிலையில் கால்சியம் குறைபாட்டை பூர்த்தி செய்ய தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடலாம் இதன் மூலம் எலும்பு முறிதல் நோய் போன்ற எலும்பு சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்.

பீட்ரூட்டில் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் ரத்தத்தில் சரியான அளவு ஹீமோகுளோபின் இருக்கும். இரும்புச்சத்து நிறைந்த இந்த பீட்ரூட் உங்களை உள்ளிருந்து பலமாக வைத்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com