தலைமுடிக்கு அற்புதம் செய்யும் வாழை இலை… புதுசா இருக்கே! 

Banana Leaf for Hair
Benefits of Banana Leaf for Hair

வாழை இலைகள் சமையல் நோக்கங்களுக்காக அல்லது அலங்காரங்களுக்காக மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், முடி பராமரிப்புக்கும் இவை ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இந்தப் பதிவில் வாழை இலைகள் தலைமுடிக்கு செய்யும் அற்புத நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

வாழை இலைகளில் இயற்கையான எண்ணெய்கள் மற்றும் ஈரப்பதம் உள்ளது. அவை உங்கள் தலைமுடியை சீரமைக்கவும், ஊட்டம்ளிக்கவும் உதவும். உங்கள் தலை முடிக்கு வாழை இலையை அரைத்து பயன்படுத்துவது அல்லது அதன் சாற்றைப் பிழிந்து தலையில் தடவுவது, தலைமுடிக்குத் தேவையான நீரேற்றத்தை வழங்கி மென்மையாக இருக்க உதவும். 

வாழை இலையில் உள்ள இயற்கையான ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உச்சந்தலைக்கு மிகவும் நல்லது. வாழை இலையை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் உச்சந்தலையில் உள்ள எரிச்சல் சரியாகி, பொடுகைக் குறைத்து உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

வாழை இலையில் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. அவை முடியின் வலிமையை ஊக்குவித்து, அவை உடைவதை தடுக்கும். எனவே உங்களது முடிப் பராமரிப்பில் வாழை இலை சாறுகளைப் பயன்படுத்தி ஆரோக்கியமான தலை முடியைப் பெறுங்கள். 

மேலும், வாழை இலையை அரைத்து தலையில் தடவுவதால் தலைமுடிக்கு இயற்கையான பொலிவு கிடைக்கிறது. அதன் கண்டிஷனிங் பண்புகள் முடியை இயற்கையாக பளபளப்பாகி, சிறப்பான தோற்றத்தை உருவாக்க உதவுகின்றன. 

முடிப் பராமரிப்புக்கு வாழை இலைகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை. பெரும்பாலும் இதில் தீங்கு விளைவிக்காத ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவை இல்லாததால், குறைந்தபட்ச சுற்றுச்சூழல் தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. 

முடிப் பராமரிப்புக்கு வாழை இலைகளை எப்படி பயன்படுத்துவது? 

  • முதலில் வாழை இலைகளை வெட்டி அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து திரவத்தை மட்டும் தனியாக  வடிகட்டி ஆற வைக்கவும். பின்னர் அந்தத் தண்ணீரை தலை குளிப்பதற்கு முன் தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்யவும். 

  • அடுத்ததாக வாழை இலைகளை அரைத்து தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஹேர் மாஸ்க் செய்தும் தலையில் தடவலாம். 

  • உச்சந்தலையில் எரிச்சல் அல்லது அரிப்பு இருக்கும் நபராக இருந்தால், வாழை இலையை நசுக்கி நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். இதை சிறிது நேரம் அப்படியே விட்டு தண்ணீரில் கழுவினால், உச்சந்தலை பிரச்சனைகள் சரியாகும். 

இதையும் படியுங்கள்:
ஒரே வாரத்தில் உடல் எடை குறைப்பது சாத்தியமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
Banana Leaf for Hair

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி வாழை இலையின் அற்புத நன்மைகளை நீங்கள் பெற முடியும். இது முற்றிலும் இயற்கையானது என்பதால், உங்களுக்கு எவ்விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. ஒருவேளை ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், சரியாக தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com