இடது பக்கம் மூக்கு குத்துவதன் அறிவியல் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்!

Natural beauty tips
Benefits of Left Nostril Piercing
Published on

பெண்கள் இயற்கையாகவே அழகு என்றாலும், அவர்கள் இந்த ஆடை, அலங்காரம் எல்லாம் கூடுதல் அழகுதான். அப்படி ஒரு அழகுதான் மூக்கு குத்துவது. முந்தைய காலத்தில் எல்லாம் கட்டாயம் 2 பக்கமும் மூக்கு குத்த வேண்டும். (Benefits of Left Nostril Piercing) ஆனால் அது காலப்போக்கில் ஒரு பக்கம் மட்டும் குத்துவது என்று ஆனது. அதுவும் குறிப்பாக வலது பக்கம் மட்டும் குத்துவார்கள். பிறகு குத்தினால் குத்தலாம் இல்லையென்றால் தேவையில்லை என்றானது.

அப்படி காலத்திற்கேற்ப மக்கள் மாறிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் இன்றும் மூக்கு குத்துவதையே சிலர் ட்ரெண்டாக்கியுள்ளனர். ஸ்டைலான மூக்குத்தி போடுவது என மூக்கு குத்துவதை ட்ரெண்ட் செய்துள்ளனர்.

ஆனால் மூக்கு குத்துவதற்கு பின்னாடியும் பல காரணங்கள் உள்ளன. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க...

பெண்களுடைய மூக்கில் துளையிட்டு தங்க மூக்குத்தி அணியும்போது உடல் வெப்பம் கிரகிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கெட்ட வாயு வெளியேறவும் மூக்குத்தி அணிவது உதவியாக உள்ளது. மூக்குத்தி அணியும்போது சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு தொடர்புடைய நோய்கள், பார்வையில் வரும் தொந்தரவு, நரம்பு தொடர்புடைய நோய்களையும் தடுக்க முடிகிறது. இந்தியாவில் உள்ள இந்து சமயத்தோர் மூக்கு குத்துவதை அதிகமாக பின்பற்றுகின்றனர். மூக்கு குத்தி கொள்ளும் பெண் திருமணத்திற்கு தயாராக இருப்பதை குறிக்கிறது. திருமணமானவர்களும் மூக்குத்தி அணிகின்றனர்.

இதையும் படியுங்கள்:
மேற்குத் தொடர்ச்சி மலையின் விசித்திரமான சுற்றுலாத் தலங்கள்!
Natural beauty tips

ஆனால் எந்த பக்கம் மூக்கு குத்திக்கொள்வது என்ற குழப்பம் பலருக்கும் உள்ளது. இந்தியாவின் வடதிசையில் உள்ள பெண்கள் மூக்கின் இடப்பக்கமும், தென்னிந்திய பெண்கள் மூக்கின் வலப்பக்கமும் மூக்குத்தி அணிந்து கொள்கின்றனர்.

பெண்கள் இடது பக்கம் மூக்கு குத்தி கொள்வதுதான் நல்லது. ஆண்களுக்கு வலப்பக்கமும், பெண்களுக்கு இடப்பக்கமும் வலுவான பகுதியாக உள்ளது. இப்படி இடப்பக்கம் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும்போது தான் அவர்களது வலது பக்க மூளை நன்றாக இயங்கும் என கூறப்படுகிறது.

பெண்களுடைய மூக்கில் உள்ள மடல் பகுதியில் துவாரம் இடுவதால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் இருக்கும் கெட்ட வாயு நீங்கும். வலது பக்கமும் சிலர் மூக்குத்தியை அணிந்து கொண்டாலும் இடப்பக்கமே நல்ல பலன்களை தருவதாக சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com