தலைமுடிக்கு அற்புதம் செய்யும் வேப்பெண்ணெய்… இவ்வளவு நன்மைகளா?

Neem Oil
Benefits of Neem Oil For Hair.
Published on

பாரம்பரிய மருத்துவத்தில் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் வேப்பெண்ணை அதன் பலவிதமான மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது. சருமப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இருந்து, வீக்கத்தைத் குறைப்பது வரை வேப்பெண்ணெய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.‌ இந்தப் பதிவில் முடி ஆரோக்கியத்தில் வேப்ப எண்ணையின் அற்புத நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

  • முடி வளர்ச்சி: வேப்ப எண்ணெயில் உள்ள ஆன்ட்டி மைக்ரோயியல் பண்புகள் தலையில் உள்ள பாக்டீரியாக்களை கொல்ல உதவுகின்றன. இது அடைப்பட்ட துளைகளைத் திறந்து புதிய முடி வளர்வதற்கான வழியை ஏற்படுத்துகிறது. வேப்ப எண்ணெயில் உள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடி வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. 

  • தலைமுடியை வலுப்படுத்தும்: வேப்ப எண்ணையில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் முடி சேதத்தைத் தடுக்க உதவுகின்றன. மேலும் அதில் நிறைந்துள்ள தாதுக்கள் முடியை வலுப்படுத்தி முடி உதிர்தலைத் தடுக்கிறது. 

  • பொடுகுப் பிரச்சனையை சரிசெய்யும்: வேப்பெண்ணையின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பு, தோல் அலர்ஜி மற்றும் பொடுகு போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன. இதன் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் நோய்த் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுவதால், தலையில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அது விரைவில் சரியாகும். 

  • முடிக்கு ஈரப்பதத்தைத் தருகிறது: வேப்ப எண்ணெய் முடியை ஆழமாக ஊற வைத்து ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. இது வறண்ட உடையக்கூடிய முடியை மென்மையாகவும் நிர்வகிக்க எளிதாகவும் மாற்றுகிறது. 

  • பளபளப்பை தரும்: வேப்பெண்ணெய் முடியின் மேற்பரப்பை மென்மையாக்கி பளபளப்பை அதிகரிக்கிறது. இது முடிக்கு முற்றிலும் ஆரோக்கியமான முறையில் பளபளப்பான தோற்றத்தைக் கொடுக்கிறது. 

வேப்ப எண்ணெய் பயன்படுத்தும் வழிகள்: 

வேப்ப எண்ணையை சூடாக்கி அதை நேரடியாக தலை மற்றும் முடியில் மசாஜ் செய்யவும். இதை அப்படியே 30 நிமிடங்கள் ஊறவிட்டு பின்னர் மென்மையான ஷாம்பு போட்டு கழுவினால் முடி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறிவிடும். 

வேப்ப எண்ணெயில் தயிர் மற்றும் தேன் சேர்த்து ஹேர் மாஸ்க் தயாரித்து தலையில் தேய்த்து குளிக்கலாம். அல்லது வேப்ப எண்ணெயை நேரடியாக தண்ணீரில் கலந்து தலையில் ஊற்றி அலசலாம். 

இதையும் படியுங்கள்:
வேப்ப இலை சாறில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்
Neem Oil

கவனத்தில் கொள்ள வேண்டியவை: சிலருக்கு வேப்ப எண்ணெய் பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்படலாம். எனவே முதலில் சிறிதளவு வேப்ப எண்ணெயை தலையில் தேய்த்து எரிச்சல் இருந்தால் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தவும். தலையில் வேப்பெண்ணெய் தடவும்போது அது கண்களில் படாமல் கவனமாக இருங்கள். வேப்பெண்ணெய் துணிகளில் கரைகளை ஏற்படுத்தும் என்பதால், தலையில் தேய்க்கும்போது துணியை பாதுகாத்துக் கொள்ளுங்கள். வேப்ப எண்ணெயின் வாசனை மோசமாக இருக்கும் என்பதால், உங்களது சொந்த விருப்பத்தின் பேரில் இதைப் பயன்படுத்துவது நல்லது. 

இதைத் தலையில் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் குறைவு என்பதால், முடிப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க இது ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியாகும். வேப்ப எண்ணெயை உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்து அழகான மற்றும் ஆரோக்கியமான முடியைப் பெறுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com