வேப்ப இலை சாறில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்

வேப்ப இலை சாறில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்
Published on

இயற்கையிலேயே பல்வேறு மருத்துவ குணம் கொண்ட, வேப்ப மரம் நம் நாட்டில் உள்ள பெரும்பாலான வீட்டில் வளர்க்கப்படுகிறது.

ஆயுர்வேதத்தில் பல ஆண்டுகளாக வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வேம்பு கசப்பாக இருக்கும். ஆனால் வேப்ப இலையை தினமும் வெறும் வயிற்றில் உட்கொண்டால், பல உடல்நலப் பிரச்சனைகளை சமாளிக்கலாம்.

அதிலும் இதன் சாறு இன்னும் பல நோய்களுக்கு மருந்தாக திகழ்கின்றது. தற்போது வேப்பிலை இலை சாறு என்னென்ன நோய்களை குணமாக்குகின்றது என்று பார்ப்போம்.

தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் அந்த இலைகளில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்கி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. இதனால் உங்கள் குடல் இயக்கம் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

வேப்ப இலைகளில் தயாரிக்கப்பட்ட ஜூஸை தினமும் அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

வேப்ப இலை சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் இவற்றை ஒன்றாக கலந்து தினமும் பருகி வந்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்திகரிக்கப்படுவதன் மூலம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் வெளியேறுகிறது. இதனால் உடலில் இருந்து ஆரோக்கியமற்ற நச்சுக்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.

குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலை கொழுந்தை அரைத்து சாப்பிட கொடுக்கலாம் அல்லது வேப்பிலையை ஜூஸ் வடிவிலும் கொடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com