ஹேர் சீரம்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள்!

hair serum...
hair serum...pixabay.com
Published on

ஹேர் சீரம் என்பது கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்க வடிவமைக்கப்பட்ட முடி பராமரிப்பு பொருட்கள் ஆகும். ஹேர் சீரம்களைப் பயன்படுத்துவதன் சில பொதுவான நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

1.  முடி உதிர்வைக் கட்டுப்படுத்துகிறது : ஹேர் சீரம்கள் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, முடியின் மேற்பகுதியை மென்மையாக்குவதோடு, கரடுமுரடான மற்றும் கட்டுக்கடங்காததாக மாறுவதைத் தடுக்கிறது.

2. பளபளப்பு; ஹேர் சீரத்தை தொடர்ந்து பயன்படுத்தும் போது முடி கற்றைகளின் மேற்பரப்பை மென்மையாக்கு கிறது. மேலும் தலைமுடிக்கு ஆரோக்கியமான பளபளப்பை தருகிறது.

3. ஈரப்பதம் மற்றும் நீரேற்றம்:  முடி சீரம்களில் ஈரப்பதமூட்டும் பொருட்கள் உள்ளன, அவை முடியை ஹைட்ரேட் மற்றும் ஊட்டமளிக்க  உதவுகின்றன.

4. வெப்ப பாதுகாப்பு: பகல் நேரத்தில் வெயிலில் அலைந்து திரியும்போது முடிக்கற்றைகள்  அதிக அளவு வெப்பத்திற்கு ஆளாகின்றன; அதனால் முடி உதிர்தலும் தலைப் பகுதி மிகவும் சூடாகவும் ஆகிறது.  ஹேர் சீரம் வெப்பத்தால் முடி உதிரும் தன்மையை மாற்றுகிறது. 

5. தலைமுடியை சிக்கல் இல்லாமல் வைக்கிறது;

ஹேர் சீரம் முடியை மென்மையாக மாற்றுகிறது. அதனால் முடிக்கற்றைகள்  உடைந்து போவதை குறைக்கிறது. சீப்பு கொண்டு தலைமுடியை வாரும்போது அது இலகுவாக செயல்பட முடிகிறது. தலை முடியில் சிக்கல் ஏற்படாமல் செய்கிறது.

6. நுனி முடிக்கு பாதுகாப்பு

பொதுவாக தலை முடியின் நுனி பகுதி பிளவு பட்டு போகும். அதனால் முடி வளர்ச்சி குறையும் ஆனால் சீரம் தொடர்ந்து பயன்படுத்தும் போது அது முடி இழைகளுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்பட்டு நுனி முடியின் பிளவுகளை தடுக்கவும் குறைக்கவும் செய்கிறது. 

7. முடியின் நிறத்தை பாதுகாக்கிறது;

சிலர் ஹேர் கலரிங் செய்திருப்பார்கள். பல வகையான சிகை அலங்காரம் செய்வார்கள் அவர்களுக்கு ஹேர்  யுவி பாதுகாப்பு வழங்குகிறது அதனால் முடியின் நிறம் பாதுகாக்கப்படுகிறது.

ஹேர் கலரிங் ...
ஹேர் கலரிங் ...

8. நிர்வகிக்கும் திறனை மேம்படுத்துகிறது: முடி சீரம் கட்டுக்கடங்காத இழைகளை அடக்கி, ஸ்டைலை எளிதாக்குவதன் மூலம் முடியை மேலும் கையாளக் கூடியதாக ஆக்குகிறது.

9. மென்மை மற்றும் வழுவழுப்பு சேர்க்கிறது: சீரம் முடியின் வெளிப்புற அடுக்கை மென்மையாக்குவதன் மூலம் முடிக்கு மென்மையான அமைப்பைக் கொடுக்கும்.

10. லைட்வெயிட் ஃபார்முலாக்கள்:

பெரும்பாலான சீரங்கள் இலகு ரக முடியை பாதிப்பு உண்டாக்குவதில்லை மெல்லிய மற்றும் அடர்த்தியான முடி வகைகளுக்கு ஏற்றதாக இருக்கின்றன. 

இதையும் படியுங்கள்:
நெல்லிச்சாறை எவற்றுடன் கலந்து குடித்தால் என்ன ஆரோக்கியம் கிட்டும்?
hair serum...

11. விரைவு ஸ்டைலிங்:

நீளமான முடியாக இருந்தாலும்  சுருட்டை முடி என்றாலும் அல்லது எந்த விதமான முடி வகைகளுக்கும் ஹேர் சீரம் பயன்படுத்தும் போது விரைவான மற்றும் எளிதான ஹேர் ஸ்டைல் செய்ய முடியும். 

ஹேர் சீரம்களைப் பயன்படுத்தும்போது, ​​அவற்றை மிதமாகப் பயன்படுத்துவது அவசியம். முடி வகைக்கு ஏற்ற சீரம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். ஹேர் சிரத்தை உச்சந்தலையில் மட்டும் அல்லாமல் நடுப்பகுதி மற்றும் முடி கூந்தல் நுனிகளுக்கும் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com