
கழுத்தில் அணியும் செயின்கள் பலரால் விரும்பி அணியப்படும் அணிகலன்களாகும். தங்கம், வெள்ளி, பிளாட்டினம் என பல்வேறு உலோகங்களில் செயின்கள் கிடைக்கின்றன. இருப்பினும், சில நேரங்களில், செயின் அணிவதால் கழுத்து பகுதியில் கருமை நிறம் ஏற்படலாம். இது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையாகும். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். சில வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றி அதை சரி செய்யலாம்.
உலகத்திற்கும் கழுத்து கருமைக்கும் என்ன சம்பந்தம்?
சிலருக்கு குறிப்பிட்ட உலோகங்களுடன் ஒவ்வாமை இருக்கலாம். நிக்கல், காப்பர் போன்ற உலோகங்கள் சிலரது தோலில் எரிச்சல் மற்றும் கருமையை ஏற்படுத்தலாம். வியர்வை, அழுக்கு செயினில் படிந்து, தோலின் மீது உராய்வதால் கருமை ஏற்படலாம்.
சோப்புகள், லோஷன்கள், பெர்ஃப்யூம்கள் போன்ற ரசாயன பொருட்கள் செயினுடன் வினைபுரிந்து தோலில் கருமையை ஏற்படுத்தலாம். சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதால், தோலில் மெலனின் உற்பத்தி அதிகரித்து கருமை ஏற்படலாம். இது செயின் அணிந்த பகுதியில் அதிகமாகத் தெரியும்.
சரிசெய்யும் வழிகள்:
எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாற்றில் இயற்கையான ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எலுமிச்சை சாற்றை கருமையான பகுதியில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கருமை குறையும்.
தயிர் மற்றும் கடலை மாவு: தயிர் மற்றும் கடலை மாவு கலந்து பேஸ்ட் செய்து கருமையான பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது தோலின் நிறத்தை மேம்படுத்த உதவும்.
கற்றாழை ஜெல்: கற்றாழை ஜெல் தோலுக்கு மிகவும் நல்லது. இதனை கருமையான பகுதியில் தடவி இரவு முழுவதும் விட்டு, காலையில் கழுவவும். இது தோலை ஈரப்பதத்துடன் வைத்து கருமையை குறைக்க உதவும்.
உருளைக்கிழங்கு சாறு: உருளைக்கிழங்கு சாற்றை கருமையான பகுதியில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் கழுத்து கருமை விரைவில் நீங்கும்.
சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர்: சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து கருமையான பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது தோலின் நிறத்தை மேம்படுத்தவும், மென்மையாக்கவும் உதவும்.
வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து கருமையான பகுதியில் தடவ வேண்டும். இது தோலின் pH அளவை சமநிலைப்படுத்த உதவும்.
கழுத்தில் செயின் அணிவதால் ஏற்படும் கருமைக்கான சரியான காரணத்தை அறிந்து, மேலே குறிப்பிடப்பட்ட இயற்கை வழிகளை பின்பற்றுவதன் மூலம் இந்த பிரச்சனையை எளிதில் சரிசெய்யலாம். மேலும், உலோக ஒவ்வாமை இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை முறை மாற்றங்கள், சரியான தோல் பராமரிப்பு மூலம், கழுத்தில் ஏற்படும் கருமையை தடுத்து, அழகான தோற்றத்தைப் பெறலாம்.