பிளவுஸ் பிட்ஸ் யூஸ்ஃபுல் டிப்ஸ்!

Designing Blouse
Designing Blouse
  • ஒரு பிளவுஸ் பிட் வெட்டுவதற்கு முன்னால் துணியின் உள் பக்கத்தில் X மார்க்கை, 10 இன்ச் இடைவெளி விட்டுத் தள்ளித் தள்ளிப் போட்டுக் கொள்ளவும்.

  • தண்ணீரில் ஊறவைப்பதால் லைனிங் துணி சுருங்கி அளவு குறைந்துவிடும். அதனால் லைனிங் பிட் 20 சென்டி மீட்டர் அதிகம் வாங்க வேண்டும். பூப்போட்ட அல்லது வேறு டிசைன் போட்ட பிளவுஸ் பிட் வாங்குவதாக இருந்தால், 10 சென்டி மீட்டர் அதிகம் துணி வாங்க வேண்டும்.

  • புடைவை பிளவுஸுக்கு லைனிங் துணி வாங்கும் போது மிகவும் மெல்லிய வலை மாதிரி உள்ள துணியை வாங்கக் கூடாது. ஏனென்றால். புடைவையில் உள்ள பிளவுஸ் 10 வருடம் உழைக்கும் என்றால், உள்ளே கொடுத்துத் தைக்கும் லைனிங் பிட்டும் அது மாதிரி உழைக்காது. சீக்கிரம் கிழிந்து விடும். அதனால் தரமுள்ளதாகப் பார்த்து வாங்க வேண்டும்.

  • ஜரிகை பார்டர் எனில், கை ரவுண்ட், சைடு பகுதியில் உட்புறம் ஓவர்லாக் செய்யவும் (அ) கை ரவுண்ட் மற்றும் சைடு பகுதிக்கு மெல்லிய லைனிங் துணியை ஜாயின்ட் கொடுத்துப் பிசிறில்லாமல் மடித்துத் தைக்கவும். ஷோல்டர் ஜாயின்ட் வரும் இடத்தில், 1" அளவில் உள் துணி கொடுத்துத் தைத்து ஹெம்மிங் செய்ய வேண்டும்.

  • பூ டிசைன் போட்ட பிளவுஸ் பிட் என்றால் பூ டிசைன் கீழிருந்து மேல் வரும்படி வெட்டவும். கை பிட்டும் அதே மாதிரி கவனித்து வெட்டவும். துணி போதவில்லை என்றால் கை பிட் சுற்றளவில் இருபுறமும் 2" அளவில் ஜாயின்ட் செய்துகொண்டால், அக்குள் பகுதியில் ஜாயின்ட் உள்ளே போய்விடும். ஜாயின்ட் வெளியே தெரியாது.

  • ஒரு பிளவுஸ் தைக்கும்போது, முதலில் முன் பகுதி, பின் பகுதி  மற்றும் ஷோல்டரும் இணைத்து அதன்பிறகு கழுத்துக்கு உள் பிட் வைத்துத் தைத்து, கடைசியாகத்தான் கை பிட் இரண்டையும் இணைக்க வேண்டும்.

  • கை பிட் இணைக்கும்போது அவசரப்படக்கூடாது. வலது கை பிட் வலதுபுறம் வருகிறதா எனக் கவனித்துப் பார்த்துத் தைக்க வேண்டும். முன் வெட்டு வெட்டிய பகுதி கை பிட்டில் R. Side என்று போட்டுக் கொண்டால். வலது பக்கம் தைக்கச் சுலபமாக இருக்கும். அதேபோல் கை பிட் ஜாயின்ட் செய்யும்போது, ஒரு தையல் மட்டும் போட்டு நாலா பக்கமும் திருப்பிப் பார்த்துத் துணி எங்காவது மாட்டி உள்ளதா என்று சரிபார்த்து, அதன் பின்பு மற்றொரு தையல் போடவும்.

  • கை பிட் ஜாயின்ட் செய்யும்போது, பிளவுஸை கீழ்ப்புறமும், கை பிட்டை மேல்புறமும் வைத்துத்தான் தைக்க வேண்டும். ஒரு சமயம் கை பிட் சின்னதாக இருந்தால் பிட்டை லேசாக இழுத்துத் தைக்கவும். ஊசி மிஷினில் இருக்கும்போது இழுக்கவும். இல்லாவிட்டால் துணி கிழிந்து விடும்.

  • பிளவுஸ் தைக்கும்போது, பின்பக்கப் பட்டியில் முதலில் ¼ இன்ச் அளவில் ஒரு மடிப்பு மடித்துத் தைக்க வேண்டும். அதன் பின்பு, முன்பகுதியைத் தைத்து உள்ள பிளவுஸ் பிட்டின் சைடு பகுதியில், வைத்துப் பார்க்க வேண்டும். இரண்டு சைடும் போக 1" பின்பக்கம் அதிகம் உள்ளதா என்று பார்த்து அதன்பின்புதான் பின் பக்க பட்டி 1" அளவில் தைக்க வேண்டும்.

  • ஒரு சமயம் முன்பக்க சைடு பகுதியைவிட பின்பக்க சைடு பகுதி குறைவாக இருந்தால். முன்பக்க சைடு பகுதி நான்காவதாக ஒரு டாட் கப் வரும் இடத்திற்கு 1¼ '' இடைவெளி விட்டுத் தைத்து அதன்பின்பு பின் பக்கம் இணைத்தால் சரியாக வரும்.

  • டிசைன் பிளவுஸ் தைப்பதாக இருந்தால் கழுத்து மற்றும் கை டிசைன்களை சார்ட்டில் கட் செய்து உங்கள் பெயர் எழுதி ஃபைல் செய்து வைத்துக்கொண்டால் மறுபடியும் தைக்கும்போது அளவு பார்க்கத் தேவையில்லை.

  • டிசைன் பிளவுஸுக்கு ஸ்டோன் ஓட்டாமல் ஸ்டோனில் ஓட்டை உள்ளதை வாங்கி மெல்லிய ஊசி கொண்டு தைத்து விட்டால் தண்ணீரில் எத்தனை முறை நனைத்தாலும் ஸ்டோன் கீழே விழாது. மேலும், எம்ப்ராய்டரி பூ, மாங்காய், மயில் போன்ற ரெடிமேட் டிசைன்கள் கடைகளில் கிடைக்கின்றன. அதை வாங்கி மிஷின் அல்லது கை ஊசியால் தைத்து அதன் மேல் ஸ்டோன் தைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஃபேஷன் உலகை கலக்கிக் கொண்டிருக்கும் 'ஜம்ப்சூட்' ஆடைகள் (jumpsuit dress) !
Designing Blouse
  • பட்டுப் புடைவை மற்றும் ஃபேன்ஸி புடைவைகளுக்கு ஏற்கெனவே நார்மலாக பிளவுஸ், தைத்து இருந்தால், தைத்த பிளவுஸில் ரெடிமேட் ஸ்டோன் மற்றும் டிசைன்களை நீங்களே நெ.7 கை ஊசியால் தைத்து டிசைன்ஸ் செய்யலாம்.

  • தையல் மிஷின் இல்லாவிட்டாலும் கை ஊசியைக்கொண்டே, நார்மலாகத் தைத்த பிளவுஸுக்கு மேலே டிசைன் வொர்க் செய்து கொடுத்து வீட்டில் இருந்தே சம்பாதிக் கலாம்.

  • சாதாரணமாக ஒரு பிளவுஸ் தைக்கும்போது அளவு பிளவுஸில் என்னென்ன மாற்றங்கள் தேவை என்று ஒரு பேப்பரில் தனியாக எழுதிக்கொள்ள வேண்டும். அதை வைத்து புதிய பிளவுஸின் அளவில் மாற்றங்கள் செய்துகொண்டு தைக்கலாம். பிளவுஸ் உயரம் 1" அதிகம் தேவையெனில், உங்கள் பிளவுஸ் 13" என்றால் 14 + தையலுக்கு 1½ இன்ச் சேர்த்து 15½ என்று எழுத வேண்டும். அதேபோல என்ன மாற்றம் தேவையோ அதை வெட்டுவதற்கு முன்பே எழுதிக்கொள்ளவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com