உதடுகள் பொலிவுற லிப்ஸ்கரப் எளிதாக தயாரிக்கலாம் வாங்க!

lips scrub
lips scrubImage credit - pixabay
Published on

ம் முகத்திற்கு அழகு சேர்ப்பது உதடுகள்தான். மேக்கப் மூலம் மற்ற அவயங்களை அழகுப்படுத்திக் கொள்வது போல உதடுகளை அழகாக்க, ஆரோக்யமாக வைத்திருக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆரோக்கியமாகவும், ஈரப்பதத்துடன் இருக்க நாம் சில மெனக்கெடல்களை செய்து கொள்ளவேண்டும்.

நிறைய தண்ணீர் அருந்துவது, உதடுகளை கடிக்காமல் இருப்பது, தரமான மேக்கப் பொருட்களை போடுவது என கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்ள உதடுகள் அழகாகவும் சுத்தமாகவும் இருக்கும்.

உதட்டில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு,கருமை போன்றவற்றை போக்க மிருதுவாகவும், பளபளப்பாகவும் உதடுகளை மாற்ற வல்லவை லிப் ஸ்கிரப்கள். கடைகளில் பிராண்டட் ஆக வாங்க சிறப்பாக இருக்கும். ஆனால் விலை அதிகமாக இருக்கும். நாமே வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு ஸ்கிரப் தயாரித்து கொள்ளலாம்.

6 டீஸ்பூன் வெள்ளை சர்க்கரையுடன், 3டீஸ்பூன் எலுமிச்சைசாறு, தேங்காய் எண்ணெய் 3 டீஸ்பூன் சேர்த்து கலந்து அதனுடன் வைட்டமின் ஈ ஆயிலை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். இதுவே  லெமன் லிப் ஸ்க்ரப். இதை உதடுகளில் தடவி மிருதுவாக மசாஜ் செய்து பின் கழுவ உதடுகளின் கருமை மாறும்.

ஒரு டீஸ்பூன் பூசணிக் கூழுடன், ஒரு டீஸ்பூன் பிரவுன் சுகர் சேர்த்து நன்கு கலந்து பின் அதில் 1டீஸ்பூன் காபித்தூள், 1/4டீஸ்பூன் பாதாம் ஆயில் சேர்த்து கலக்க வேண்டும். இதை உதடுகளில் தடவி வந்தால் அதில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி உதடுகளை பளபளப்பாக்கும்.

ஒரு  டேபிள்ஸ்பூன் பழுப்பு நிற சர்க்கரை ,ஒரு டீஸ்பூன் தேன், 1டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இது  உதடுகளை வறட்சியில் இருந்து பாதுகாக்கும். உதடுகள் இயற்கை நிறமான ரோஸ் நிறத்தில் இருக்க உதவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் 1டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை, 1டீஸ்பூன் தேன், 1டீஸ்பூன் திராட்சை எண்ணெய் மற்றும் லெமன் ஆயில் கலந்து இந்த லிப் ஸ்கரப்பை போட்டு வர உதடுகளின் கருமை யைப் போக்கி பளபளப்பையும், மிருதுதன்மையையும் தரும்.

இதையும் படியுங்கள்:
நகைச்சுவையும் கற்றுக்கொடுக்கும்..!
lips scrub

உலர்ந்த ஆரஞ்சு பழத்தோலை பவுடராக்கி அதனுடன் பழுப்பு நிற சர்க்கரை பாதாம் எண்ணெய் சேர்த்து உதட்டில் தடவி ஊறியதும் கழுவி வர உதடுகளுக்கு ஈரப்பதத்தை தரும்.

இவ்வாறு செய்ய நேரமில்லை எனில் வெறும் தேங்காய் எண்ணெய் தடவிவர உதட்டு கருமை போகும். வெண்ணைய் அல்லது நெய் தடவி நீவி விட மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

பீட்ரூட் சாறு தடவ இயற்கை சிவப்பு நிறத்தில் உதடுகள் அழகு பெறும். உடலுக்கு வெளியே செய்வதைப்போல நல்ல சத்தான பழங்கள், குறிப்பாக மாதுளைசாறு, திராட்சைசாறு என அருந்த உதடுகள் மற்றும் முகமும் பளிச்சென்று இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com