வலிமையான கூந்தலைப் பெற கற்பூரம் போதுமே!  

Camphor is enough to get strong hair!
Camphor is enough to get strong hair!
Published on

கற்பூரம் பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள். அதன் குளிர்ச்சியான தன்மை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, தோல் மற்றும் முடி பராமரிப்பிலும் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக வலிமையான கூந்தலைப் பெற கற்பூரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பதிவில் கற்பூரத்தை தலையில் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.‌ 

கற்பூரத்தை தலையில் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்: 

கற்பூரத்தின் குளிர்ச்சியான தன்மை தலை பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது முடி வேர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 

கற்பூரம் ஒரு சிறந்த ஆன்ட்டி செப்டிக். இது தலைப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை கொல்வதன் மூலம் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. 

கற்பூரம் சரும செல்களை புதுப்பிக்க உதவுகிறது. இது தலைப்பகுதியில் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்து முடி உதிர்வைக் குறைக்கிறது. மேலும், இது கூந்தலை இயற்கையாகவே கண்டிஷனிங் செய்து, மென்மையாகவும் மினுமினுப்புத் தன்மையுடனும் வைக்கிறது. 

கற்பூரம், பூஞ்சை தொற்றுகளை தடுக்கும் தன்மை கொண்டது. அழற்சி மற்றும் சொரி போன்ற பிரச்சனைகளைத் தடுக்க உதவும். 

கற்பூரத்தை கூந்தலில் எப்படி பயன்படுத்துவது: 

சம அளவு கற்பூரம், தேங்காய் எண்ணெயை கலந்து தலைமுடியில் மசாஜ் செய்யவும். இது முடிவேர்களை வலுப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். 

நெல்லிக்காயை அரைத்து அதில் சிறிது கற்பூரம் சேர்த்து பேஸ்ட் செய்து தலைமுடியில் தடவினால், முடி உதிர்வது கட்டுப்பட்டு கூந்தல் கருமையாகும். 

ஒரு முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து, அதில் சிறிது கற்பூரம் சேர்த்து தலைமுடியில் தடவினால் கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். 

சம அளவு கற்பூரம் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து தலைமுடியில் மசாஜ் செய்தால் முடி சிக்கில்லாமல் மென்மையாக இருக்கும். 

ஆலுவேரா ஜெல் மற்றும் கற்பூரத்தை சேர்த்து தலைமுடியில் தடவினால், தலைப்பகுதியில் உள்ள அரிப்பு நீங்கி கூந்தல் ஈரப்பதமாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
Rose Face Gel: முகத்தைப் பளபளப்பாக்கும் ரோஜா ஃபேஸ் ஜெல் செய்வது எப்படி?
Camphor is enough to get strong hair!

கற்பூரத்தை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை: 

கற்பூரத்தை நேரடியாக தலைமுடியில் பயன்படுத்த வேண்டாம். எப்போதும் எண்ணெய் அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளுடன் கலந்துதான் பயன்படுத்த வேண்டும். கற்பூரம் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, பயன்படுத்துவதற்கு முன் ஒரு சிறிய பகுதியில் தேய்த்து பரிசோதித்துப் பார்க்கவும். கண்களில் கற்பூரம் பட்டால் உடனடியாக குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கற்பூரத்தை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசிப்பது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com