அடிக்கடி மொட்டை அடித்தால் அடர்த்தியாக முடி வளருமா? உண்மை இதோ!

Head Shaving
Head Shaving

நமது பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகள், அவ்வப்போது மொட்டை அடித்தால் வரும் காலத்தில் அடர்த்தியாகவும்  கருமையாகவும் கூந்தல் வளரும் என்று சொல்வார்கள். அது உண்மையா?

அவர்கள் கூறுவதை கேட்டு முடிக்கு ஆசைப்பட்டு நாமும் அடிக்கடி மொட்டை அடிப்போம். ஆனால், வளர்ந்தப் பிறகுதான் தெரியும். மொட்டை அடித்தது அனைத்தும் வீண் என்று. சில பேருக்கு இரண்டு முறை சாமிக்கு மொட்டை அடிக்கவேண்டும் என்று கூறுவார்கள். அதற்கு நாம் மறுக்கும்போது இந்தக் கட்டுக்கதையை இறக்கிவிடுவார்கள். காலப்போக்கில், இந்தக் கட்டுக்கதையை நாம் உண்மையாகவே நம்பிவிடுவோம். ஆனால், அது நிஜமாகவே உண்மையா?

உண்மையில், முடியை முழுவதுமாக நீக்கிவிட்டோம் என்றால், பொடுகு போன்ற எந்தத் தொல்லையும் இருக்காதுதான். ஆனால், தலையில் உள்ள அனைத்து முடிகளும் நீக்கப்படுவதால், சூரிய ஒளி நேரடியாக உச்சந்தலையில் விழும். இதனால், தலையில் எரிச்சல், புண் போன்றவை ஏற்படலாம்.

அதாவது, தலையை மொட்டையடிக்கும்போது கூந்தல் நேராக வெட்டப்படும். இது வளர வளர கரடுமுரடானதாக இருப்பது போல் தோன்றுமே தவிர முடியின் அடர்த்தியை ஒருபோதும் மாற்றாது.

நீங்கள் தலைமுடியை ஷேவிங் செய்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் கிடையாது. எனவே மொட்டை அடிப்பது உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிப்பதில்லை. முடி உதிர்தல் பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.

நமது முடியின் வளர்ச்சி தோல் அடுக்கின் கீழே உள்ள மயிர்க்காலங்களில் இருந்து ஆரம்பமாகிறது. முடியின் வேர்கள் உருவாக புரதம் மற்றும் இரத்தம் தேவைப்படுகிறது. முடியின் வேர்களில் இருந்து வெளிவரும் முடிகள் அப்படியே வளர்ந்து மயிர்க்கால்கள், செபாசியஸ் சுரப்பிகள் (சரும எண்ணெயை சுரக்கும்) வழியாக செல்கிறது. இந்த சரும எண்ணெய் முடியின் வளர்ச்சிக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து உதவுகிறது. இந்த எண்ணெய் தான் நம் தலைமுடி தடினமாகவும், நீளமாகவும் வளர உதவி செய்கிறது.

இந்த ஷேவிங் மேற்பரப்பில் மட்டுமே நடைபெறுகிறது. எனவே இதனால் முடியின் அமைப்பிலோ அல்லது முடியின் நிறத்திலோ அல்லது வளர்ச்சி விகிதத்திலோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே தலையை மொட்டை அடிப்பதால் புதிய முடி வளர்ச்சியை பாதிக்காது, அதே நேரத்தில் புதிதாக மயிர்க்கால்களும் உருவாகாது. இருக்கின்ற மயிர்க்கால்களில் இருக்கும் முடிகளே வளரும்.

இதையும் படியுங்கள்:
ஆண்களே இது உங்களுக்காக... கொஞ்சம் கவனியுங்கள்!
Head Shaving

உண்மையில், முடியின் அடர்த்தி, வளர்ச்சியை மரபியல் மற்றும் ஹார்மோன் காரணிகளே தீர்மானிக்கின்றன. எனவே, வைட்டமின் ஏ, சி, டி, ஈ, பயோட்டின், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து தலைக்கு குளியுங்கள். சல்பேட் இல்லாத ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்துங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com