மழைக்காலத்திலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாமா? அது பயன் அளிக்குமா ?

Tinted sunscreen
Tinted sunscreen
Published on

முகத்தை பாதுகாப்பதில் அனைவருக்கும் அதீத அக்கறை உண்டு. அதாவது தனது வெளித்தோற்றம் எப்போதும் அழகாக தெரிய வேண்டும் என்பதில் அனைவரும் சற்று கவனமாக இருப்பர். முகத்தை பராமரிப்பதற்கு பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் முக்கியமானது சன்ஸ்கிரீன். இதனை வெயில் காலத்தில் தான் அதிகமானோர் பயன்படுத்துவர். ஆனால் இதை மழைக்காலத்திலும் பயன்படுத்தலாம் என்று உங்களுக்கு தெரியுமா? இதை மழைக்காலத்திலும் பயன்படுத்துவதால் அதிக பலன்களை பெற முடியும். 

வெயில் காலத்தில் சன்ஸ்கிரீன்

வெயில் காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து  பாதுகாக்க முடியும். அதாவது சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்களால் சருமம் சேதமுறுவதோடு, முன்கூட்டியே முதுமையை உருவாக்க வழிவகுக்கும். மேலும் முகத்தில் கருமையும் அதிகரிக்கும் என்பதால், வெயில் காலத்தில் சன்ஸ்கிரீன் சருமப் பராமரிப்பில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக விளங்குகிறது.

மழைக்காலத்தில் சன்ஸ்கிரீன்

வெயிலினால் மட்டும் சரும பாதிப்பு ஏற்படுவதில்லை. நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள், பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் என பல வழிகளில் சருமம் பாதிக்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
இளமை வேண்டுமா? அப்ப இத கவனிக்க வேண்டுமே!
Tinted sunscreen

சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், வறட்சி, பருக்கள் போன்றவை எப்போது வேண்டுமானால் ஏற்படலாம். அதனால் எப்போது வேண்டுமானால் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். இது சருமத்தை பாதுகாப்பதற்கும் சருமத்தில் உள்ள பாதிப்புகளை சரி செய்வதற்கும் பெரிய உதவியாக இருக்கும். சன்ஸ்கிரீனை முகத்திற்கு மட்டுமல்லாமல் கை மற்றும் கால்களிலும் அப்ளை செய்யலாம்.

சன்ஸ்கிரீன் - நன்மைகள்:

புற ஊதாக் கதிர்கள்

சன்ஸ்கிரீன் சருமத்தில் புற ஊதா கதிர்கள் ஊடுருவிச் செல்வதை தடுத்து சருமத்திற்கு பாதுகாப்பளிக்கும்.

ஹைப்பர் பிக்மென்டேஷன்

சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை  தவிர்க்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

வயதான தோற்றம்

சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் மற்றும் கரும் புள்ளிகள் போன்றவை ஏற்பட்டு, முன்கூட்டியே வயதான தோற்றத்தை அனுபவிக்க நேரிடலாம். ஆனால் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்துக்கு தேவையான நெகிழ்ச்சி மற்றும் கொலாஜன் கிடைத்து, சருமத்தின் இளமைத் தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அதோடு மென்மையான மற்றும் பொலிவான சருமத்தையும் பெற முடியும்.

சருமத்துக்கு ஈரப்பதம்

நாம் பயன்படுத்தும் பல சன்ஸ்கிரீன்களில் சருமத்திற்க்கு ஈரப்பதமூட்டும் பொருட்கள் இருப்பதால், இவை சருமத்தை ஹைட்ரேட் செய்யவும், சருமத்தில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கவும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு சருமத்தை எல்லா காலங்களிலும் பராமரிக்கும் சன்ஸ்கிரீனை வாங்கும் போது அதிக கவனம் தேவை. உங்கள் சருமத்திற்கு எது ஏற்றது என அறிந்து தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் சரியான பலன்களை பெற முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com