நாம் அணிய வேண்டிய உடையை அழகாக தேர்வு செய்துவிடுகிறோம். ஆனால், அந்த உடைக்கு எடுப்பாக அணிய வேண்டிய Accessories ல் கோட்டை விட்டு விடுகிறோம். இன்றைக்கு எந்த உடைக்கு எந்த மாதியான அணிகலன்களை அணிந்தால் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும் என்பதை இப்பதிவில் காண்போம்.
1. Casual dress அணியும் பொழுது அதற்கு ஏற்றவாறு ஒரு குட்டி Signature chain அல்லது Chunky necklace அணிவது சிறப்பாக இருக்கும்.
2. ஆடம்பரமாக உடையணியும்பொழுது அதில் தங்க நிறத்தில் Base work இருந்தால், தங்க நகைகளோ அல்லது ஆன்டிக் நகைகளையோ அணியலாம்.
3.இதுவே, ஆடையில் வெள்ளி நிறத்தில் Base work அல்லது ஜரிகை இருந்தால், வெள்ளி, வைரம், முத்து போன்ற அணிகலன்களை அணியலாம்.
4. ஒரே நிறத்தில் ஆடையணியும்போது அதற்கு Contrast நிறத்தில் அணிகலன்கள் அணிவது மேலும் அழகைக் கூட்டும். உதாரணத்திற்கு, பிங்க் நிறத்தில் உடையணியும் பொழுது அதற்கு பச்சை நிறத்தில் அணிகலன்களை தேர்வு செய்து அணிந்தால் மிகவும் எடுப்பாக தெரியும்.
5.பெண்களின் பாரம்பரிய உடையான புடவை அணியும் பொழுது High neck blouse க்கு பெரிய தோடுகளை அணிய வேண்டாம். அதற்கு பதில் ஒரு சிம்பிள் ஸ்டெட் போடும் பொழுது அது அவருக்கு நலினமான தோற்றத்தை கொடுக்கும்.
6.உங்களுடைய உடையின் நிறத்திலேயே Accessories வாங்க வேண்டாம். அது தற்போது Out of fashion ஆகிவிட்டது. Contrast colours ல் அணிவதே டிரெண்டில் உள்ளது. அதற்கு Colour wheel ஐ பயன்படுத்தி எந்த நிறத்திற்கு எது சரியாக இருக்கும் என்று தேர்வு செய்து அணிவது சிறப்பாகும்.
7. உங்கள் ஆடைக்கு எந்த அணிகலன் அணிவது என்ற குழப்பம் ஏற்பட்டால், உங்களின் உடையின் Neck pattern க்கு ஏற்றவாறு அணியலாம். உதாரணத்திற்கு, உங்களுடைய பிளவுஸ் Round neck ஆக இருந்தால் Choker பயன்படுத்தலாம்.
8. உங்களுடைய உடையை கொஞ்சம் Heavy ஆக தேர்வு செய்திருந்தால், அதற்கு ஏற்றாற்போல அணிகலன்களை Minimal ஆக தேர்வு செய்து அணிவது உங்களுடைய லூக்கை மேலும் அழகாக்கும். இந்த டிப்ஸையெல்லாம் தீபாவளிக்கு ட்ரை பண்ணி அழகாக ஜொலியுங்கள்.