சருமப்பிரச்னை, வியர்வை துர்நாற்றம், கூந்தல் பிரச்னை ஆகிய அனைத்துப் பிரச்னைகளையும் சரிசெய்வதற்கு இந்த ஒரே ஒரு கல் இருந்தால் போதுமானதாகும். அந்த கல் வேறு ஏதுமில்லை படிகாரக்கல்தான். இந்த படிகாரத்தின் பயன்களைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1.படிகாரத்தை ஸ்கின் கேர் ரொட்டீனில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில், முகத்தில் காணப்படும் சருமத்துளைகளை சரிசெய்ய உதவுகிறது. இது சருமத்தை இறுக்கி சருமத்துளைகளை குறைக்கிறது. மேலும் படிகாரத்தை டோனராக பயன்படுத்துவதால், மிருதுவான சருமத்தை பெறலாம்.
2.படிகாரத்தில் ஆன்டி பேக்டீரியல் பண்புகள் உள்ளதால், முகத்தில் உள்ள ஆக்னே மற்றும் கரும்புள்ளிகளை போக்க உதவுகிறது. மேலும் இதில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளதால், சருமத்தில் அழற்சி ஏற்படாமல் பாதுகாத்து பருக்கள் வருவதை தடுக்கிறது.
3.தினமும் படிகாரத்தை சருமத்தில் பயன்படுத்துவதால், முகம் பளப்பளப்பாகவும், பொலிவாகவும் மாறும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள், கரும்புள்ளி, பிக்மெண்டேஷனை நீக்கி சருமத்தை ஜொலிக்க செய்கிறது.
4.டியோடரெண்டால் அழற்சி இருப்பவர்கள் படிகாரத்தை பயன்படுத்தலாம். துர்நாற்றத்தை உருவாக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழித்து உடல் தூர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
5.சூரிய ஒளி சருமத்தில் படுவதால் ஏற்படும் எரிச்சலை, சருமம் சிவந்துப்போதல் ஆகியவற்றை சரிசெய்ய படிகாரத்தை தண்ணீரில் குழைத்து தடவுவதன் மூலம் குணமாக்கலாம்.
6.படிகாரத்தில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இதை தண்ணீரில் கலந்து தலைக்கு குளிக்கும் பொழுது பொடுகுத்தொல்லை அறவே நீங்கி ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.
7. நம் உடலில் உள்ள ரோமங்களை இயற்கையாக நீக்குவதற்கு படிகாரம் பயன்படுகிறது. படிகாரத்தை தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து அந்த பேஸ்டை ரோமத்தில் தடவி காயவைத்த பிறகு கழுவினால், உடலில் உள்ள தேவையற்ற ரோமங்கள் நீங்கும்.
8.கூந்தல் உடைதல், அரிப்பு போன்ற பிரச்னைகளை சரி செய்கிறது. மேலும் முடியின் வேரை வலுவாக்கி பளபளப்பான கூந்தல் வளர வழி செய்கிறது. இயற்கையாகவே முடியை ஸ்ட்ரைட் செய்ய நினைப்பவர்களுக்கு படிகாரம் சிறந்த ஆப்ஷென். இதை முட்டை வெள்ளைக்கரு அல்லது தண்ணீரில் குழைத்து தலையில் மாஸ்க் போட்டு சிறிது நேரம் கழித்து குளிப்பதன் மூலம் தற்காலிகமாக ஸ்ட்ரெயிட் ஹேர் கிடைக்கும்.