இளநீர் வழுக்கை எடுத்து அதனுடன் கடலைமாவைச் சேர்த்து வாரம் இருமுறை தேய்த்துவர சருமத்தின் வறண்ட நிலை மாறி மீண்டும் இளமைப் பொலிவோடு திகழும். வழுவலுடன் இளநீர் சேர்த்து அரைக்கவும்.
காய்வைத்த பசு மஞ்சள், வெள்ளை மிளகு, வேப்பம் விதை, கடுக்காய்தூள் ஆகியவற்றை சமஅளவு எடுத்து வெயிலில் உலர்த்தவும். மிஷினில் பௌடராக அரைக்கவும். இந்த பொடியில் பால் சேர்த்துக் குழைத்து முகம், கழுத்து, கை, கால்களில் தடவி நன்றாக ஊறியதும் வெந்நீரில் குளிக்கவும். சருமம் மின்னும். தினமும் இதை உபயோகிக்க உங்க மேனி பொன்மேனிமாகிவிடும்
வெந்தயக் கீரையை வாங்கி இலையை மட்டும் ஆய்ந்து நிழலில் உலர்த்தி காய்ந்ததும் மிக்சியில் அரைக்கவும். பிறகு சலித்து வைக்கவும். இந்தப் பொடியில் சிறிது எடுத்து தேன் கலந்து முகம் கை,கழுத்து பகுதிகளில் தடவிவர சூரியஒளி பட்டு பாதிக்கப்பட்ட சருமம் பொலிவாக்கும்.
புதினாவை ஆய்ந்து நிழலில் காயவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தினமும் காலையில் ஒரு டம்பளர் வெந்நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் புதினா பௌடர்சேர்த்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து அருந்தி வர ரத்தம் சுத்தமாகும். தேமல், சொறி, சிரங்கு, முகப்பரு, சரும அரிப்பு போன்ற சரும நோய்கள் குணமாகும்.
செம்பருத்திப் பூக்களை நிழலில் காயவிடவும். பிறகு மிக்ஸியில் தூளாக்கி சலித்து வைக்கவும். இந்த தூளை ஒரு டம்பளர் பசும் பாலில் சேர்த்து தினமும் ஒருவேளை அருந்திவர உடலில் மினு மினுப்பு ஏறும்
சுத்தமான குங்குமப் பூவில் ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்து பசும்பால் விட்டு அரைக்கவும். அதை நெற்றி, முகம்,கை, கழுத்து, பகுதிகளில் பூசி வர கருமை படர்ந்து முகம் மிளிரும். இது கரும்புள்ளிகளை யும் நீக்கும்
ஒரு பிடி கசகசா, ஒரு பிடி பயத்தம் பருப்பு, ஒரு பிடி துளசி இரண்டு வேப்பங் கொழுந்து எல்லாவற்றையும் தயிரில் ஊறவைத்து அரைக்கவும். இந்த விழுதை ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்தி வந்தால் அன்று மலர்ந்த ரோஜா போன்று முகம் பொலிவு பெறும்.