பெண்களுக்கு பிடித்த நகை வகைகளில் செயின், ஆரம் போன்றவை பழைய டிரெண்டாக மாறி வருகிறது. தற்போது இளம் பெண்கள் சோக்கர்(Choker Necklace) வகைகளில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சோக்கர் என்பது கழுத்தோடு ஒட்டி அணியப்படும் நகையாகும். தற்போது உள்ள இளம் பெண்கள் இந்த சோக்கர் வகை நெக்லஸ்களை விரும்பி அணிகிறார்கள். எனவே இன்றைய பதிவில் விதவிதமான சோக்கரின் வகைகளை பற்றி காணலாம்.
கோல்ட் சோக்கர் (Gold choker)
நீங்கள் புதுமை விரும்பியாக இருப்பினும் பாரம்பரியம் மாறாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவரானால் கோல்ட் சோக்கர் உங்களுக்கு சரியாக இருக்கும். கோல்ட் சோக்கர் அணிவதால் ராயல் லுக் கிடைக்கும். இதை பார்ட்டி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அணியலாம். பார்ட்டி போன்றவற்றிற்கு பளிச்சிடும் புடவை அணிந்து செல்லும்போது தங்க சோக்கர் நெக்லஸை அணிவது பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும்.
இந்தியன் சோக்கர்(Indian choker)
சோக்கர் வகைகள் மேற்கத்திய நாடுகளிலிருந்து வந்திருந்தாலும் இந்தியர்கள் அதை தங்கள் பாராம்பரிய உடைகளுக்கு ஏற்றவாறு மாற்றி அணிந்துக் கொண்டார்கள். புதுவிதமான டிசைன்களில் பல வண்ண கற்களை பதித்து அணிந்தனர். இதை புடவைகளுடனும், வெல்வட் உடைகளுடனும் அணியலாம்.
பிளேக் சோக்கர்(Black choker)
பல வித வண்ணங்களிலும், வடிவங்களிலும் சோக்கர்கள் இருப்பினும், ப்ளாக் சோக்கருடைய மவுசு என்றுமே குறையாது. இதை எல்லா ஆடைகளுடனும் சேர்த்து அணிந்து கொள்ளலாம் என்பதால் பெண்கள் இதை எப்போதுமே விரும்பி வாங்குகிறார்கள்.
ஸ்மால் சோக்கர் நெக்லஸ்(Small choker necklace)
Small choker is big in fashion என்று சொல்வார்கள். இது போன்ற தனித்துவமான மற்றும் சிம்பிளான டிசைன்களை நிறைய பெண்கள் விரும்புகிறார்கள். மேற்கத்திய உடைகளுடன் இதை அணிவது சிறப்பாக இருக்கும்.
வெல்வட் சோக்கர் (Velvet choker)
வெல்வட் சோக்கர்கள் வின்டேஜ் கலெக்ஷன்களில் ஒன்றாகும். நீங்கள் சிறந்த சோக்கரை தேடுகிறீர்கள் என்றால் கண்டிப்பாக வெல்வட் சோக்கரை வாங்கலாம். இதை அணிவதால் கிளேமரஸ் லுக் கிடைக்கும். இதை ஆப் ஸோல்டர் டிரெஸ், பார்ட்டி டிரெஸ் போன்றவற்றுடன் அணியலாம்.
டேட்டூ சோக்கர் நெக்லஸ்(Tattoo choker necklace.)
நீங்கள் தனித்துவமான மற்றும் அழகான சோக்கரை எதிர்ப்பார்த்தால் டேட்டூ சோக்கரை தேர்வு செய்யலாம். இது பார்ப்பதற்கு அழகாகவும், அணிவதற்கு நேர்த்தியாகவும் இருக்கும். இதை டாப்ஸ், சார்ட் டிரெஸ், குர்த்தி, டீ சர்ட் போன்றவற்றுடன் அணியலாம்.
சில்வர் சோக்கர் (Silver choker)
சில்வர் சோக்கர் நெக்லஸ் வெள்ளை நிற குர்தாவுடன் அணியும்போது சிறப்பாக இருக்கும். இதனுடைய அழகிற்காகவே நிறைய பேர் வாங்க விருப்பப் படுகிறார்கள். நிறைய பாலிவுட் ஹீரோயின்களை சில்வர் சோக்கருடன் பார்க்க முடிகிறது. இதை குர்த்தி, ஸ்கர்ட் போன்றவற்றுடன் சேர்த்து அணியும்போது அழகிய தோற்றத்தை தருகிறது.
முத்து சோக்கர் (Pearl choker)
முத்தில் சோக்கர் அணிவது நளினத்தை கொடுக்கும். உங்களுக்கு முத்து பிடிக்கும் என்றால் முத்தில் சோக்கர் அணிவது சிறந்த ஆப்ஷன் ஆகும். இதை பிளெயின் நிற ஆடைகளுடன் அணியலாம். கூந்தலை சற்று உயர்த்தி கட்டிக்கொள்வது மேலும் நளினத்தை சேர்க்கும்.
வைர சோக்கர் (Diamond choker)
வைரம் என்றாலே மோதிரத்தில் மட்டும் பதிப்பதை விடுத்து வைரம் பதித்த சோக்கர்கள் தற்போது புது டிரெண்டாகி வருகிறது. பார்ட்டி கவுன்களுக்கு இந்த வைர சோக்கர் எடுப்பாக இருக்கும். கருப்பு மற்றும் சிவப்பு நிற அடைகளுடன் இதை அணியும்போது சிறப்பாக இருக்கும்.