How to  maintain Aari works in blouse
How to maintain Aari works in blouseImage Credits: Pinterest

ஆரி பிளவுஸ் அதிக நாட்கள் நீடிக்கணுமா? இந்த 5 டிப்ஸ்களை தெரிஞ்சுக்கோங்க!

Published on

ற்போது பெண்கள் மத்தியிலே ஆரி வேலைப் பாடுகளுடன் செய்யப்பட்ட பிளவுஸ்கள் அதிக டிமான்டாக உள்ளது. பண்டிகை அல்லது திருமண விழா என்று எதுவாக இருந்தாலும் நிச்சயமாக ஆரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸ்களை அணிவதையே வழக்கமாக வைத்துள்ளனர். இன்று அத்தகைய ஆரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸை எப்படி அதிக நாள் பாதுகாத்து பயன்படுத்துவது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

ஆரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸ் சற்று விலை அதிகமாகவே இருக்கும். அதனால் ஒருமுறை அணிந்ததும் எடுத்து வைத்து விடாமல், இதை பேணிக்காப்பது என்பது மிகவும் அவசியமாகும். இந்த ஆரி வேலைப்பாடுகள் தென்னிந்தியாவில்தான் உருவானது. இதை ‘மகம் வேலைப்பாடு’ என்றும் கூறுவார்கள். இந்த முறையை பயன்படுத்தி சிக்கலான டிசைன்களை பிளவுஸ், துப்பட்டா, புடவையில் வடிவமைக்க முடியும்.

1. ஆரி பிளவுஸை அணியும்போது Sweat pads இல்லாமல் அணிய வேண்டாம். Sweat pads ஐ பயன்படுத்தும்போது நம் உடலில் இருக்கும் வியர்வையை அது உறிஞ்சி விடுவதால் பிளவுஸில் உள்ள பீட்ஸ், மணி போன்றவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

2. ஆரி பிளவுஸை அயன் செய்வதை தவிர்த்துவிடவும். அயன் செய்வதால் அதில் இருக்கும் வேலைப்பாடுகள் பாதிப்படையலாம். கண்டிப்பாக அயன் செய்ய வேண்டும் என்றால், அடியில் ஒரு தலையணை வைத்து அயன் செய்யவும்.

3. ஆரி பிளவுஸை கண்டிப்பாக சாதாரணமாக பீரோவில் வைக்காமல் அதை ஒரு காட்டன் பேக்கில் வைத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதுபோல, பிளவுஸை மடிக்கும்போது வேலைப்பாடுகள் இருக்கும் பக்கத்தை உள்பக்கமாக வைத்து மடித்து வைப்பது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
அஜ்ராக் புடவையின் தனித்துவத்தை பற்றித் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க!
How to  maintain Aari works in blouse

4. ஆரி பிளவுஸை துவைக்காமல் நிழலிலே இரண்டு நாட்கள் போட்டு உலர்த்துவதே சிறந்தது. கண்டிப்பாக துவைக்க வேண்டும் என்று எண்ணினால், ஷாம்புவை பயன்படுத்தி கைகளால் அலசுவது சிறந்தது. வாஷிங் மிஷினில் போடுவதை தவிர்க்கவும்.

5. கடைசியாக, இந்த பிளவுஸை காய வைக்கும்போது நேரடியாக சூரிய ஒளியில் போடக்கூடாது. அதைப்போல, ஹேங்கரிலும் காய வைக்கக்கூடாது. அதிலுள்ள மெட்டிரியல் விரிவடைந்து வீணாகிவிடும். இதை தரையிலே சமமாக போட்டு உலர்த்துவது சிறந்ததாகும்.

இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றி பார்த்துக் கொண்டால் ஆரி பிளவுஸை நீண்ட நாட்கள் நல்ல நிலைமையில் வைத்துக் பயன்படுத்தலாம். முயற்சித்துப் பாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com