தற்போது இருக்கும் நவீனக்காலத்தில் புடவை கட்ட விரும்பும் பெண்கள் அதை பாரம்பரியம் கலந்த மார்டனாக அணிய வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அத்தகைய எண்ணம் உடையவர்கள் தாராளமாக ‘அஜ்ராக்’ புடவையை தேர்வு செய்யலாம். இந்த வகை புடவையின் கலைநயம், தனித்துவம், எங்கு தயாரிக்கப்படுகிறது போன்ற தகவல்களை விரிவாக இந்த பதிவில் காணலாம் வாங்க.
அஜ்ராக் புடவைகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள Kutch மாநிலம் ஆகிய இடங்களில் தயாரிக்கப் படுகிறது. ஸ்டேம்ப் பிரின்டிங் முறையை பயன்படுத்தி இந்த புடவையில் உள்ள டிசைன்களை கைகளாலேயே வடிவமைக்கிறார்கள். ‘அஜ்ராக்’ என்னும் வார்த்தை அரேபிய மொழியான ‘அஸ்ரக்’ என்னும் வார்த்தை யிலிருந்து வந்தது. அதன் அர்த்தம் ‘நீலம்’ என்பதாகும். இந்த நிறம் அதிகமாக அஜ்ராக் புடவைகளில் பயன்டுத்தப்படுகின்றது. இந்த புடவையில் பெரிதும் பயன்படுத்தும் டிசைன்கள் இயற்கை மற்றும் ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். பூக்கள், மயில், மரம் போன்ற டிசைன்கள் பயன்படுத்த பட்டிருக்கும்.
அஜ்ராக் புடவையில் அதிகப்படியாக சிகப்பு அல்லது நீல நிறப்பின்னனியை கொண்ட நிறத்தையே பயன் படுத்தியிருப்பார்கள். Vegetables dry colours ஐ பயன்படுத்தி பச்சை மற்றும் மஞ்சள் நிறம் சேர்க்கப்படுகிறது. இந்த புடவையை தயாரிக்கும் செயல்முறை சற்று கடினத் தன்மையை கொண்டது என்பதாலும், இயற்கையான காய்கறிகளில் இருந்து எடுக்கப்பட்ட சாயத்தை பயன்படுத்துவதாலும் இந்த புடவையின் விலை சற்று அதிகமாகும்.
அஜ்ராக் புடவை பிரபலமாக இருப்பதற்கு காரணம் சிந்தி பாரம்பரியத்தின் சின்னமாக விளங்குவதால் ஆகும். இது இந்தியா, குஜராத்தில், kutch, Sindh ஆகிய இடங்களிலும் சிந்து சமவெளி நாகரீகத்தின் காரணமாக பிரபலமாக உள்ளது. இந்த வகை புடவை பார்ப்பதற்கு அழகான டிசைன்களை கொண்டிருக்காது. எனினும் பாரம்பரியம், வரலாறு, ஆன்மீகம் போன்றவற்றை வைத்து டிசைன்கள் வடிவகைப்பட்டிருக்கும்.
சமீபகாலமாக அஜ்ரக் டிசைன்கள் உலகளவில் பிரபலமடைந்து கொண்டிருக்கிறது. இதில் புடவை, சல்வார், ஸ்கார்ப், ஸ்கர்ட் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
இது மிகவும் பழமையான புடவை தயாரிக்கும் முறை மட்டுமல்லாமல் எதிர்காலத்து சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் வரலாற்று சின்னமுமாகும். இதை இயற்கையான சாயம், பூச்சிக்கள், செடிகள் போன்றவற்றிலிருந்து தயாரிப்பதால் நிலையானத்தன்மை, சுற்றுப்புறத்திற்கு பாதுகாப்பாகவும் விளங்குகிறது. அஜ்ராக் புடவைகள் பலவகைகள் இருப்பினும் அதில் குறிப்பிடப்பட வேண்டியது, Sabuni ajrak, Do rangi ajrak, Kori ajrak ஆகியவையாகும்.
இந்த புடவைகள் சுத்தமான காட்டன் அல்லது பட்டில் தயாரிக்கப்படுகிறது. இன்றைய பாகிஸ்தானில் உள்ள Khatri சமூகம் இன்றளவும் இந்த புடவை தயாரிப்பை செய்து வருகிறது. பாகிஸ்தானின் தலைவர்கள் மரியாதை கருதி அஜ்ராக் துணியை பொது நிகழ்ச்சிகளுக்கு அணிந்து வருவது இதனுடைய பாரம்பரியத்தையும், பழமையையும் உலகுக்கு வெளிப்படுத்துகிறது.