
சருமம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொண்டால் தோற்றம் நன்றாக பொலிவு பெறும். இருப்பினும் சிலருக்கு வயது மூப்பு காரணமாக சருமத்தில் சுருக்கம், கரும்புள்ளி, கருவளையம் ஏற்பட்டு தோற்ற பொலிவை பாதிக்கும். இதற்கான சரியான தீர்வைப்பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
முகம், வயிறு, மூட்டுப்பகுதி, கழுத்து ஆகிய இடங்களில் ஏற்படும் கருமையை கெமிக்கல் பீல் கொண்டு நீக்க முடியும். இது நம் உடலின் மேற்ப்பகுதியில் உள்ள பழைய செல்களை அகற்றி புதிய செல்களை வெளிக்கொண்டு வந்து சருமப்பொலிவைத் தரும். கொலாஜெனை அதிகம் உருவாக்குவதும் இந்த சிகிச்சையின் அடிப்படையாகும். இந்த சிகிச்சையை கண்டிப்பாக Cosmetology நிபுணரின் ஆலோசனை தான் செய்துக் கொள்ள வேண்டும்.
கெமிக்கல் பீல் சிகிச்சை மேற்க்கொள்வதற்கு முன்பு நோயாளியின் சருமத்தை பரிசோதித்து பக்கவிளைவு ஏற்படுமா? என்று பரிசோதிக்க வேண்டும். முதலில் சருமத்தின் மேல் இருக்கும் எண்ணெய் பசை முழுமையாக நீக்கப்படும். பிறகு Glycolic, salicylic, lactic போன்ற ரசாயன திரவங்களில் எது தேவையோ அதை சருமத்தின் மேல் தடவப்படும். இந்த சிகிச்சையில் நோயாளியின் உடல்நிலை, சருமத்தின் தன்மையை கொண்டு லைட், மீடியம், டீப் என்று மூன்று வகையாக பிரித்து சிகிச்சை வழங்கப்படும். விழாக்கள், பார்ட்டிகளுக்கு செல்வதற்கு முன்பு party peel செய்துக் கொண்டால் முகம் பளிச்சென்று தோற்றமளிக்கும்.
கெமிக்கல் பீல் சிகிச்சை செய்துக் கொண்ட பிறகு டாக்டர் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு நடந்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான எண்ணெய், இனிப்பு போன்ற உணவுகளை தவிர்த்துவிட்டு நீர், புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெயில் காலத்தில் இளநீர், வெள்ளேரி, மோர், நுங்கு சாப்பிட வேண்டும். நாள்தோறும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல தூக்கம் வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக சருமம் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.