
சியா விதை மற்றும் பீட்ரூட் மாஸ்க்
மூன்று டேபிள் ஸ்பூன் சியா விதை, இரண்டு பீட்ரூட் துண்டுகள் சிறிது பால் இவற்றை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவ முகம் ஜொலிக்கும்.
சியா விதைகள் ஆல்மண்ட் ஆயில் மற்றும் எலுமிச்சை
இரண்டு டேபிள்ஸ்பூன் சியா விதையை முதல் நாள் ஊறவிடவும். மறுநாள் ஒரு ஸ்பூன் ஆல்மண்ட் ஆயில் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கலந்து முகத்தில் தடவி பிறகு கழுவவும்
சியா விதைகள் மற்றும் தேங்காய் எண்ணெய் மாஸ்க்
முதல்நாள் இரவு இரண்டு டேபிள் ஸ்பூன் சியா விதையை ஊறவைத்து மறுநாள் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து முகத்தில் பூசிக் கழுவ மாசு மருவின்றி முகம் பளபளக்கும்.
சியா விதை வைட்டமின் ஈ ஆயில் மற்றும் தக்காளி ஜூஸ் மாஸ்க்
சியா விதை இரண்டு டேபிள் ஸ்பூன் இரவு ஊறவைத்து மறுநாள் அதில் வைட்டமின் ஈ ஆயில் மற்றும் தக்காளி ஜுஸ் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துத் கழுவ முகம் கண்ணாடி போல் மின்னும்.
சியாவிதை தேன் மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க்
பருக்கள் மற்றும் கருமை நீங்கி முகம் ஜொலிக்க முதல் நாள் இரவு சியா விதை இரண்டு டேபிள் ஸ்பூன் ஊறவைக்கவும். மறுநாள் ஒருடீஸ்பூன் தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து முகத்தில் பூசிக் கழுவ இது உங்கள் முகத்தை பளிச்சென்று ஆக்குவதுடன் நீரேற்றம் ஆகவும் வைக்கும்.
சியா விதை தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை
முதல் நாள் ஊறவைத்த சியாவிதை இரண்டு டேபிள்ஸ்பூன் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணை மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைசாறு சேர்த்து முகத்தில் தடவி ஒரு மணிநேரம் கழித்து கழுவ இது உங்கள் முகத்தில் இறந்த செல்களை நீக்கி முகத்தை பொலிவாக்கும்.
சியா விதை மற்றும் பால்
உங்களுக்கு கொரியப் பெண்களைப் போன்று கண்ணாடி போன்ற முகம் வேண்டுமா. இரண்டு டேபிள் ஸ்பூன் சியா விதைகளை அரை கப் பாலில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துத் கழுவ பளபளப்பான முகத்தை பெறுவீர்கள்.
சியா விதைகள் சிறந்த ஆண்டிஆக்சிடண்டுகளாகவும், நல்ல நீரேற்றத்தை சருமத்திற்குத் தருவதாகவும் மற்றும் அழற்சியைப் போக்கும் பண்பு உள்ளதால் முக சிவப்பை தடுப்பதாலும், மேலும் இதன் பாலிஃபினால் முகப் பொலிவை கூட்டுவதாலும் மேற்கூறிய மாஸ்க்குகள் சிறந்த பலனைத் தரும்.