
கருமையான கூந்தல் வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்குமே இருக்கும். இளமையான தோற்றத்துடன் இருப்பது யாருக்குதான் பிடிக்காது? முடி கருமையாகவும், பளபளப்பாகவும் இருக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சில டிப்ஸை இந்தப் பதிவில் காண்போம்.
1. மருதாணி பவுடர், முட்டையின் வெள்ளைக் கரு, புளிக்காத தயிர் மூன்றையும் கலந்து தலையில் தேய்த்து இரண்டு மணிநேரம் வைத்து குளித்து வந்தால் இளநரை கருப்பாக மாறும்.
2. நார்த்தங்காய் சாறு எடுத்து அதை தலையில் தேய்த்துவிட்டு சில நிமிடத்திற்கு பிறகு சோறு வடித்த கஞ்சியில் சீயக்காய் சேர்த்து தேய்த்து குளித்தால் தலையில் உள்ள அழுக்குகள் நீங்கி முடி பளபளப்பாகும்.
3. தலைக்கு குளித்த பிறகு ஈரம் நன்றாக காய்வதற்கு முன் எண்ணெய் தடவாமல் இருந்தால் முடி செம்பட்டையாகாமல் இருக்கும்.
4. பெரிய நெல்லிக்காயை நன்றாக நறுக்கி இடித்து அதை ½ லிட்டர் நல்லெண்ணெய், ¼ லிட்டர் தேங்காய் எண்ணெய்யோடு சேர்த்து காய்ச்சி வடிகட்டி தலைக்கு தடவி வந்தால் முடி கருமையாக வளரும்.
5. மாதம் ஒருமுறை தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து இரவில் மென்மையாக தலைக்கு மசாஜ் செய்து விட்டு காலையில் சீயக்காய் தேய்த்து தலை குளித்து வர முடி செழிப்பாக வளரும்.
6. கூந்தல் எண்ணெய் பசையுடன் இருந்தால், எழுமிச்சைச் சாறு தடவி ஊற வைத்து பிறகு ஷாம்பு போட்டு குளித்தால் முடி நன்றாக வளரும்.
7. ஒரு கைப்பிடி வேப்பங்கொழுந்து, ஒருகைப்பிடி குப்பைமேனி, ஒரு துண்டு மஞ்சளை தண்ணீர் விட்டு அரைத்து பேஸ்ட் போல தலையில் தடவி நன்கு காய்ந்த பிறகு அலசி குளித்தால் முடி உதிர்வது குறையும்.
8. தண்ணீரை கொதிக்க வைத்து அந்த ஆவியில் தூய்மையான டவலை நனைத்து பிழித்து அதை தலையில் கட்டிக்கொண்டு பிறகு சிறிது நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளித்து விட கூந்தல் மென்மையாக பளபளக்கும்.
9. முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து வாரம் ஒருமுறை தலையில் தடவி குளித்து வர அடர்த்தியான கூந்தல் வளரும்.
இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணி கருமையான கூந்தலை பெறுங்கள்.