Cleansing, Scrubbing, Toner, Mask: முகப்பொலிவிற்கு இந்த நான்கு ஸ்டெப்ஸ் போதுமே…!

Cleanser
Cleanser

Cleansing, Scrubbing மற்றும் Toner, Mask இவைதான் நமது முகத்தை பொலிவாக்கும் ரகசியங்கள். இந்த நான்கையும் முறையாக செய்தாலே திருமணம் போன்ற பெரிய நிகழ்வுகளுக்குக் கூட எளிதாக தயாராகிவிடலாம்.

Cleansing:

நம் தினசரி சரும பராமரிப்பிற்கும் க்ளன்சர் என்பது மிகவும் முக்கியமானதாகும். க்ளென்சிங் முறையில் முகத்தைக் கழுவுவது சருமத்தை சுத்தமாக வைப்பதோடு, நமக்கு பொலிவான முகத்தையும் அது அளிக்கிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதில் க்ளன்சர் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் ஒப்பனை செய்வதற்கு முன்பு கண்டிப்பாக க்ளன்சரை உபயோகிப்பது அவசியம் ஆகிறது.

க்ளென்சரைக் கடைகளில் வாங்குவதற்கு பதிலாக, வீட்டிலேயே செய்யலாம்.

இயற்கை முறை:

க்ளென்சிங் செய்வதற்கு பால் மற்றும் மஞ்சள் ஆகியவை இருந்தாலே போதும். இவற்றை கலந்து முகத்தில் நன்றாகத் தடவி சுத்தம் செய்தல் வேண்டும். இதனால், முகத்தில் உள்ள அனைத்து விதமான, தூசிகள், அழுக்குகள், இறந்த செல்கள் போன்ற அனைத்தும் நீங்கிவிடும்.

Scrubbing:

சருமத்தை சரியாக சுத்தப்படுத்த இது மிகவும் பயனுள்ள வழியாகும். வியர்வை, கூடுதல் எண்ணெய், அனைத்து அழுக்குகள் மற்றும் துளைகளில் அடைத்திருக்கும் அழுக்குகளை நீக்க ஸ்க்ரப்பிங் செய்தாலே போதும். ஸ்க்ரப் செய்வதன் மூலம் துளைகள் திறக்க உதவுகிறது. க்ளென்சிங் மேல் புற அழுக்குகளை சுத்தம் செய்கிறது என்றால், ஸ்க்ரப்பிங் துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யும்.

இயற்கை முறை:

வீட்டிலேயே ஸ்க்ரப் செய்ய காபி பவுடர் மற்றும் தேன் இருந்தாலே போதும். இவை இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். உலர்ந்தப் பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

Toner:

இவை சருமத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தும் அற்புதமான பொருள். முகத்தை சுத்தம் செய்ய க்ளென்சிங் பயன்படுத்தப்படுகிறது. சுத்தம் செய்ய திறக்கப்பட்ட முகத்தின் சரும துவாரங்களை மூடிக்கொள்ள டோனிங் பயன்படுத்தப்படுகிறது. டோனிங் செய்வதன் மூலம் சருமத்தின் பிஹெச் அளவு சமப்படுத்தப்படுகிறது. சருமம் பளபளப்பாக மாறும்.

இயற்கை முறை:

கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர், இவை இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவுங்கள், இது உங்கள் சருமத்தின் ஓட்டைகளை அடைப்பதோடு, முகத்தை புத்துணர்வாகவும் வைத்துக்கொள்ளும்.

Face Mask:

இது சருமத்திற்கு ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தோல் தொடர்பான பிரச்சனைகளையும் குணப்படுத்துகின்றது. மேலும் இந்த ஃபேஸ் மாஸ்க் பருக்கள், துளைகள் மற்றும் தழும்புகளை அகற்றி சிறந்த நிறத்தையும் பளபளப்பையும் தருகிறது.

இதையும் படியுங்கள்:
அழகான புருவங்களைப் பெற…
Cleanser

இயற்கை முறை:

கடலை மாவு மற்றும் தயிர் இருந்தாலே போதும் வீட்டிலேயே எளிதாக ஃபேஸ் மாஸ்க் செய்துவிடலாம். இவை இரண்டையும் கலந்து முகத்தில் அப்ளே செய்ய வேண்டும். பின்னர் உலர்ந்தவுடன் அவற்றைக் கழுவினால், முகம் பொலிவாகவும் அழகாகவும் மாறும்.

இந்த நான்கு முறைகளை மட்டும் பின்பற்றினாலே முக்கியமான நிகழ்வுகளில் முகம் அழகாக இருக்கும். மேலும் இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், சருமம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com