eyebrows
eyebrows images credit - pixabay

அழகான புருவங்களைப் பெற…

Published on

பெண்களின் அழகை எடுத்துக்காட்டுவதில் புருவங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பெண்களின் அழகை தூக்கிக் காட்டுவது அவர்களின் முகம் தான். அதிலும் வில் போன்று அழகான புருவங்கள் இருந்தால் அழகுக்கு கேட்கவே வேண்டாம். புருவங்கள் அழகாக இருந்தால் கண்களில் அழகு கூடும். முகம் புதுப்பொலிவு பெறும்.

முதலில் முகவடிவத்திற்கு பொருத்தமான புருவம் எது என்பதை பார்க்கலாம்.

வட்டமான முகங்களுக்கு:

கூர்மையான, தடிமனான(திக்கான) மற்றும் உயரமான வளைவுகள் கொண்ட புருவங்கள் வட்டமான முகத்திற்கு பொருத்தமாக இருக்கும்.

நீளமான முகங்களுக்கு:

கத்ரீனா கைஃப் போன்று நீளமான முகம் உடையவர்களுக்கு கண்களின் மூலைக்கு அப்பால் நீண்ட புருவங்கள் அவர்கள் முகத்தை அழகாக்கும்.

சதுர அல்லது செவ்வக வடிவ முகங்களுக்கு:

இவர்களின் தனித்துவமான தாடையால் தடிமனான புருவங்களைத் தேர்ந்தெடுத்து முகம் குறைவான சதுரமாக தோன்றும்படி செய்ய அழகாகும். அனுஷ்கா ஷர்மா மற்றும் மர்லின் மன்றோ போன்றவர்களின் முகங்கள் இதற்கு சரியான எடுத்துக்காட்டாகும்.

இதய வடிவிலான முகங்களுக்கு:

பெரும்பாலான புருவ வடிவங்கள் இந்த முக வடிவத்திற்கு ஒத்துப் போகும். இருந்தாலும் குறைந்த அளவு வட்டமான புருவம் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆனால் இதய வடிவிலான சிறிய முகம் இருப்பின் கூர்மையான வளைவு கொண்ட புருவங்களை தேர்ந்தெடுக்கலாம்.

வைர வடிவ முகங்களுக்கு:

இந்த வகை முக வடிவம் பரந்த மற்றும் உயர்ந்த கன்ன எலும்புகளால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த வகை முகங்கள் பொதுவானதல்ல.எனவே இதற்கு உயரமான வளைவு கொண்ட புருவம் பொருத்தமாக இராது. இவர்கள் மென்மையான கோணம் கொண்ட புருவங்களை தேர்வு செய்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
உலகில் உள்ள மிக பிரபலமான காபி வகைகள் பற்றி பார்க்கலாம் வாங்க!
eyebrows

அகன்ற கண்களை உடையவர்களுக்கு மென்மையான, வளைந்த புருவங்கள் நன்றாக இருக்கும்.

புருவங்களில் முடி வளர்ச்சியை அதிகரிக்க தினம் இரவு தூங்கப் போகும் சமயம் புருவங்களில் ஆமணக்கு எண்ணெயை சிறிது தடவி வரலாம்.

புருவங்கள் அழகாகவும் சீராகவும் இருக்க சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை தடவி மெதுவாக மசாஜ் செய்யலாம்.

ரொம்ப மெலிந்த புருவங்களும் இல்லாமல் மிகவும் தடிமனான புருவங்களாகவும் இல்லாமல் நடுத்தர தடிமன் கொண்ட புருவங்களை தேர்ந்தெடுப்பது இயற்கையாகவும் நம் முகத்தை இளமையாகவும் காட்டும்.

logo
Kalki Online
kalkionline.com