

உங்கள் முகம் இறந்த திசுக்களால் பொலிவிழந்துவிட்டதா? அதற்கு சரியான தீர்வு பப்பாயா ஸ்க்ரப். பப்பாயா சிறந்த இயற்கை எக்ஸ்ஃபோலியேட்டாக செயல்படுகிறது. கரும்புள்ளிகள், முகக்கருமை நீங்க இது உதவும். பப்பாயாவில் பப்பெய்ன் என்ற நொதிகள் இயற்கை ஃபோலியேட்டாக செயல்படும் பண்பு பெற்றது. இது இறந்த திசுக்களை நீக்கி அழற்சியை போக்கி பொலிவாக்கும்.
பப்பாளி பழத்தில் இயற்கை ஆல்ஃபா ஹைட்ராக்சி அமிலங்கள் நிறைந்துள்ளன. இதன் மூலம் புதிய திசுக்கள் உருவாகும். இதன் மூலம் இதன் பயன்பாடு இயற்கை போலியேட்டாக மட்டுமல்லாமல் இளமையையும் தக்க வைக்கும். மேலும் கூடுதலாக பப்பாயாவில் ஏ,பி,ஈ வைட்டமின்களின் ஆன்டி ஆக்சிடண்டுகள் சுற்றுச்சூழலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும்.
இந்த பப்பாளி ஸ்க்ரப்பால் இரட்டை நன்மைகள் உண்டு எந்த கெமிகல் விளைவுகளும் இல்லாமல் இறந்த திசுக்களை நீக்கும். மற்றும் இதன் நொதிகள் இயற்கையான முறையில் எக்ஸ்ஃபோலியேட் செய்யும். ஒரு சிலர் கடினமான சீனி மற்றும்` உப்பு ஸ்க்ரப்கள் பயன்படுத்துபவர்களுக்கு பபாயா ஒரு ஸ்க்ரப் வரப்பிரசாதமாகும்.
பப்பாளியில் உள்ள பழ அமிலங்கள் முகத்தை நன்கு பளபளக்க வைப்பதுடன் கருமையையும் நீக்குகிறது. இதன் மூலம் சருமத்திற்கு எந்த பக்கவிளைவும் ஏற்படாது.
எண்ணெய் பசையை முற்றிலும் கட்டுப்படுத்தும் பப்பாளி ஸ்க்பப் ரகசியங்கள்
வீட்டிலுள்ள இயற்கைப் பொருட்களைக் கொண்டு பப்பாளி ஸ்க்ரப் தயாரிக்கலாம். இது எல்லாவிதமான சருமத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.
பப்பாளி, தேன் ஸ்க்ரப்
பழுத்த பப்பாளியை ஒரு துண்டு எடுத்து நன்றாக மசித்து, அத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் கலக்கவும். தேனின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மிகச்சிறந்த நீரேற்றத்தைத் தரும். நீங்கள் இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்தி வரும்போது ஒரு வாரத்திலேயே மாற்றத்தை உணர்வீர்கள்.
பப்பாளி ஓட்ஸ் மற்றும் யோக்ஹர்ட் ஸ்க்ரப்
நன்றாக பழுத்த பப்பாளி துண்டை நன்கு மசித்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பௌடர் சேர்த்து, ஒரு டேபிள் ஸ்பூன் யோக்ஹர்ட்டும் சேர்ந்து கலக்கி முகத்தில் தடவவும். ஓட்சின் இயற்கை எக்ஸ்ஃபோலியேட் பண்பு, மற்றும் யோக்ஹர்ட்டின் லாக்டிக் அமிலமும் சேர்ந்து சிறந்த எக்ஸ்ஃபோலியேட் ஆகும். இந்த ஸ்க்ரப் சென்சிடிவ் சருமத்திற்கும் சிறந்தது. அரிப்பைத் தடுக்கக் கூடியது.
முகத்துளைகளை ஆழமாகச் சுத்தப்படுத்தும் பப்பாளி ஸ்க்ரப் மற்றும் பிரவுன் சீனி
பப்பாளி பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் ப்ரௌன் சீனி மற்றும் சில சொட்டுக்கள் டீ ட்ரீ ஆயில் சேர்த்துக் கலந்து பயன்படுத்தவும். சீனி சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டாக செயல்படும் முகத்துளைகளைப் போக்கும். டீ ட்ரீ ஆயில் முகத்தில் உள்ள எண்ணைப் பசையை நீக்கும். முகத்துளைகள் மற்றும் கரும்புள்ளிகள் பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த இயற்கையான தீர்வாகும்.
பப்பாளி மற்றும் யோக்ஹர்ட் ஆலிவ் ஆயில் ஸ்க்ரப்;
பப்பாளி பழத்துண்டை நன்கு மசித்து, அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் யோக்ஹர்ட் கலந்து அதில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பயன்படுத்தவும். ஆலிவ் ஆயில் சிறந்த நீரேற்றம் தரும். குறையற்ற முகம் யோக்ஹர்ட்டின் லாக்டிக் அமிலத்தால் பொலிவாகும். இந்த ஸ்க்ரப் வறண்ட சருமம் உள்ளவர்கள் ஈர்க்கும் சிறந்த தீர்வாகும். இந்த ஸ்க்ரப் இறந்த திசுக்களை நீக்கும்.
மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் பப்பாளி ஸ்க்ரப் தரும் இரட்டை நன்மைகள்
பப்பாளி பழத்துண்டை நன்கு மசித்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயையும் சேர்க்கவும். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு உள்ளதால் வயதான தோற்றத்தைத் குறைக்கும். தேங்காய் எண்ணெய் சிறந்த நீரேற்றம் தரும்.
பனாமா ஸ்க்ரப்கள் இயற்கை முறையில் உங்கள் சருமத்தை பொலிவாக்கி நல்ல திசுக்களை ஊக்குவிக்குகிறது. முகத்துளைகளும் இதனால் நீக்கப்படுகிறது. இந்த ஸ்க்ரப்கள் உங்களின் இளமையை என்றென்றும் தக்கவைக்கும்.
முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் பிடிவாதமான கரும்புள்ளிகள் வேரோடு நீங்கி, மாசற்ற, தெளிவான மற்றும் பட்டுப் போன்ற மென்மையான சருமத்தை எவ்விதப் பக்கவிளைவுகளும் இன்றி உங்களால் மிகக் குறுகிய காலத்தில் பெற முடியும்.