வெள்ளை வேட்டியிலிருந்து கறுப்பு பிளேசர் வரை: தமிழக அரசியலில் முதல்வர் விஜய் கொண்டு வந்த புதிய ஃபேஷன் புரட்சி!

சர்வதேச ஃபேஷன் நுணுக்கங்களை கொண்டு வந்து, ‘சி.இ.ஓ’ ஸ்டைலில் தமிழக அரசியலுக்கு புதிய டிரெண்ட் அமைக்கும் விஜய்!
cm-vijay-
cm-vijay-
Updated on

தமிழக அரசியல் வரலாற்றில் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவைக் குழுவினர் ‘வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை’ அணிவதுதான் காலங்காலமாக இருந்து வரும் ஆடை அடையாளம். ஆனால், புதிய முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்கும் அரசு விழாக்களுக்கும் கறுப்பு நிற பிளேஸர் (Blazer) அணிந்து வந்து, அரசியல் களத்தில் ஒரு புதிய ஃபேஷன் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

5 ஃபேஷன் ரகசியங்கள்:

அவருடைய இந்த ஆடையில் ஒளிந்திருக்கும் நுணுக்கமான 5 ஃபேஷன் ரகசியங்கள் இதோ:

ஒற்றைப் பொத்தான் ரகசியம்:

மாண்புமிகு முதல்வர் விஜய் அணியும் இந்த உடைக்கு, பலரும் சொல்வதுபோல 'கோட்' என்று பெயர் அல்ல; இது 'பிளேஸர்'. இதில் ஒரே ஒரு பொத்தான் மட்டுமே இருக்கும். ஃபேஷன் உலகில் ஒற்றைப் பொத்தான் கொண்ட பிளேஸர்கள், ஒருவரை மிகவும் ஒல்லியாகவும் உயரமாகவும் காட்ட உதவும்.

இரண்டு அல்லது மூன்று பொத்தான்கள் கொண்ட கோட்டுகள் பாரம்பரிய தோற்றத்தைத் தரும்; ஆனால், இந்த ஒற்றைப் பொத்தான் மாடல் அவருக்கு ஒரு மாடர்ன் மற்றும் ஃபிட்டான தோற்றத்தைக் கொடுக்கிறது.

கைகளின் நீளம் மற்றும் வாட்ச் டிசைன்:

பொதுவாக கோட் போடும்போது அதன் கைகள் மணிக்கட்டு வரை நீளமாக இருக்கவேண்டும். ஆனால், விஜய்யின் ப்ளேசர் கைகள் சற்றே கச்சிதமாக, அவருடைய இடது கையில் கட்டியிருக்கும் வாட்ச் மற்றும் உள்ளே இருக்கும் வெள்ளைச் சட்டையின் முனைகள் (Cuffs) லேசாக வெளியே தெரியும்படி தைக்கப்பட்டுள்ளன. இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்படும் ஒரு நுட்பமான சர்வதேச ஃபேஷன் ஸ்டைல் ஆகும்.

Double Vent Comfort:

அவர் அணியும் பிளேஸரின் பின்புறத்தின் இருபுறமும் இரண்டு வெட்டுகள் (Double Vents) கொடுக்கப்பட்டுள்ளன. இது வெறும் டிசைன் அல்ல. மேடைகளில் நடக்கும்போதும், சோபாவில் அமரும்போதும் கோட் சுருங்காமல், உடலோடு ஒட்டி மிகவும் சொகுசாக இருப்பதற்காகவே இந்த அமெரிக்க-ஐரோப்பிய கட் (Cut) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுணுக்கமான வடிவமைப்புதான், அவருக்கு எப்போதுமே ஒரு தனி கம்பீரத்தைத் தருகிறது.

இதையும் படியுங்கள்:
விலையில் இல்லை ஃபேஷன்: எலைட் லுக் தரும் நிறங்களின் ரகசியம்!
cm-vijay-

'பாக்கெட் ஸ்கொயர்' தவிர்த்த எளிமை;

கார்ப்பரேட் உடைகளில் கோட்டின் மார்புப் பையில் ஒரு சிறிய கைகுட்டை  வைப்பது வழக்கம். ஆனால், விஜய் அதை முற்றிலும் தவிர்த்துள்ளார். எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், அந்தப் பையை அப்படியே காலியாக விட்டிருப்பது தான்  ஹைலைட்டே! உலகளாவிய ஃபேஷன் ஸ்டைலை கையில் எடுத்தாலும், தன் இயல்பான எளிமையை அவர் விட்டுக்கொடுக்கவில்லை என்று சொல்லாமல் சொல்லும் ஒரு செம புத்திசாலித்தனமான சாய்ஸ் இது.

பளபளப்பு இல்லாத மேட்-ஃபினிஷ் (Matte-Finish)

அவருடைய  ப்ளேசர் துணி வெயிலில் பளபளவென்று மின்னுவது இல்லை. அது முற்றிலும் ஒளியை உறிஞ்சும் 'மேட்-ஃபினிஷ்' (Matte Finish) ரகத்தைச் சேர்ந்தது. கேமரா வெளிச்சம் மற்றும் டிவியின் லைட்டிங்கில் இந்த துணி மிகவும் ராயலாகவும், பார்ப்பவர்களின் கண்களை உறுத்தாமலும், அவருடைய முகத்திற்கு கூடுதல் பொலிவைத் தரும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
விலையில் இல்லை ஃபேஷன்: எலைட் லுக் தரும் நிறங்களின் ரகசியம்!
cm-vijay-

அரசியல் உடை என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பழைய விதியை உடைத்து, ஒரு சர்வதேச நிறுவனத்தின் சி.இ.ஓ.  போல நவீன தோற்றத்தில் விஜய் வலம் வருவது புதுமையாக உள்ளது. ஆடை வழியிலும் தான் ஒரு ‘நவீன சிந்தனை கொண்ட, தலைவர் என்பதை விஜய் தனது தனித்துவமான உடை  மூலம் காட்டியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com