Curry Leaves Serum
Curry Leaves Serum

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கருவேப்பிலை சீரம்! 

Published on

தொன்றுதொட்டு நம் முன்னோர்கள் பயன்படுத்தி வரும் ஒரு அற்புதமான மூலிகைதான் கருவேப்பிலை. இது உணவுக்கு சுவை மட்டுமல்லாமல், நம் உடலின் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைத் தருகிறது.‌ குறிப்பாக முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கருவேப்பிலைக்கு தனி இடம் உண்டு. இன்றைய மாசுபட்ட சூழல் மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக பலர் முடி உதிர்வுப் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இத்தகைய சூழலில் இயற்கை வழியில் முடியைப் பராமரிக்க விரும்புவோருக்கு கறிவேப்பிலை சீரம் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. 

கருவேப்பிலையின் சிறப்பம்சங்கள்: 

கருவேப்பிலை என்பது வெறும் சமையலுக்கு மட்டுமே பயன்படும் ஒரு பொருள் அல்ல. இது பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலிகை. முடியின் ஆரோக்கியத்திற்கு கருவேப்பிலை மிகவும் நன்மை பயக்கும் என்பது நம்மில் பலருக்குத் தெரியும். எனவே, இதைப் பயன்படுத்தி சீரம் தயாரித்து பயன்படுத்தினால், அது தலைமுடிக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். 

கருவேப்பிலை சீரம் தயாரிக்கும் முறை: 

  • கருவேப்பிலை - ஒரு கைப்பிடி

  • தேங்காய் எண்ணெய் - ¼ கப்

  • விட்டமின் E கேப்சூல் - 2

செய்முறை: 

கருவேப்பிலையை நன்கு சுத்தம் செய்த பிறகு நிழலில் நன்றாக உளர்த்திக் கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனுடன் உலர்த்திய கருவேப்பிலையை சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். இது நன்றாகக் கொதித்த பிறகு அடுப்பை அணைத்து, எண்ணெய் குளிர்ந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிக்கட்டிய எண்ணெயில் விட்டமின் ஈ கேப்ஸ்யூலைப் பிழிந்து சேர்த்து நன்றாகக் கலக்கவும். இறுதியாக தயாரித்த சீரத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கவும்.‌

இதையும் படியுங்கள்:
கீழே குனிந்து நிமிர்ந்தால் தலை சுற்றுகிறதா? திடீர் மயக்கம் வருகிறதா? இது தான் காரணம்!
Curry Leaves Serum

தயாரித்த சீரத்தை தலைக்கு குளிப்பதற்கு முன் தலைமுடியின் வேர்கள் மற்றும் நுனிப்பகுதியில் சிறிது தடவி 30 நிமிடங்களுக்குப் பின்னர் மிதமான ஷாம்புவைப் பயன்படுத்தி தலைமுடியை நன்றாகக் கழுவும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த சீரத்தைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது. 

வீட்டிலேயே தயாரிக்கும் கருவேப்பிலை சீரம் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள ஒரு இயற்கையான வரப்பிரசாதம். இது எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் முடியை பராமரிக்க உதவுகிறது. இருப்பினும் எந்த ஒரு புதிய பொருளை பயன்படுத்துவதற்கு முன்பும் ஒரு சிறிய பகுதியில் தடவி பரிசோதித்து பார்ப்பது நல்லது. இது உங்களுக்கு அலர்ஜி எதிர்வினை ஏதேனும் ஏற்படுகிறதா என்பதைத் தெரியப்படுத்தி விடும். 

logo
Kalki Online
kalkionline.com