கீழே குனிந்து நிமிர்ந்தால் தலை சுற்றுகிறதா? திடீர் மயக்கம் வருகிறதா? இது தான் காரணம்!

Vertigo
Vertigo
Published on

நம்மில் பலருக்கும் இந்த பிரச்சனை இருக்கும். திடீரென்று காரணமே இல்லாமல் தலை சுற்றும். மயக்கம் வரும். மயக்கம் என்பது பொதுவாக வயதானவர்களுக்கும் அல்லது நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் வரும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில சமயங்களில் நாம் ஆரோக்கியமாக இருந்தாலும் திடீரென்று மயக்கம் வரும். தற்பொழுது பள்ளி படிக்கும் குழந்தைகள் முதல் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் வரை அனைவருக்கும் இந்த திடீர் மயக்கம் ஏற்படுகிறது.

ஆனால் இந்த மயக்கம் ஏன் வருகிறது என நம்மில் பலருக்கும் தெரியாது. கீழே குனிந்து விட்டு நிமிரும் பொழுது, திடீரென்று கழுத்தை திருப்பி பார்க்கும் போது, படுக்கையில் இருந்து எழும் போது திடீரென்று மயக்கம் வரும். இதற்கு பெயர்தான் வெர்டிகோ. 

நமக்கு ஏன் திடீரென்று தலை சுற்றல், மயக்கம் வருகிறது? இந்த வெர்டிகோ என்றால் என்ன? வெர்டிகோவின் அறிகுறி என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் நாம் பார்க்கலாம்.

வெர்டிகோ:

வெர்டிகோ என்றால் தலைச்சுற்றல், மேலும் உடல் வலி, உடல் சோர்வு போன்ற காரணங்களினால் வரும் மயக்கம். மேலும் இந்த வெர்டிகோவில் இரு வகைகள் உள்ளன. ஒன்று பெரிஃபெரல் வெர்டிகோ, மற்றொன்று சென்ட்ரல் வெர்டிகோ.

பெரிஃபெரல் வெர்டிகோ:

பெரும்பாலானவர்களுக்கு வருவது இந்த பெரிபெரிஃபெரல் வெர்டிகோ. காதில் ஏற்படும் பிரச்சனையால் வரும் மயக்கம் தான் பெரிஃபெரல் வெர்டிகோ. அதாவது நம்முடைய உடலின் சமநிலை பாதிக்கப்படும் பொழுது காதின் உள்சவ்வில் ஏற்படும் பிரச்சனையால் இந்த தலைச்சுற்றல் ஏற்படுகிறது. தலையை நாம் பின்னோக்கி சாய்ப்பது, அல்லது படுத்துக்கொண்டே மொபைல் பார்ப்பது போன்ற காரணங்களால் காது சவ்வில் அழுத்தம் ஏற்பட்டால், மேலும் காது அடைப்பு போன்ற காரணத்தினால் இந்த பெரிஃபெரல் வெர்டிகோ ஏற்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
வாயு பிரச்சனையை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா? 
Vertigo

சென்ட்ரல் வெர்டிகோ: 

தலையில் அடிபட்டால், பக்கவாதம், வலிப்பு நோய், இரத்தநாள நோய், ஒற்றை தலைவலி ஆகிய காரணங்கள், மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டால் இந்த சென்ட்ரல் வெர்டிகோ வரும். மூளையை பாதிக்கும் எந்த ஒரு செயலாலும் இந்த மயக்கம் வரும். தொற்று காரணமாக ஒருவருக்கு கட்டி காயம் அல்லது பக்கவாதம் போன்றவை ஏற்பட்டிருந்தால் அதனால் மூளை பாதிக்கப்படும் பொழுது இந்த சென்ட்ரல் வெர்டிகோ ஏற்படுகிறது. இந்த சென்ட்ரல் வெர்டிகோவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு இடத்தில் நிலையாக நிற்க முடியாது. மேலும் நடக்கும் பொழுது மயக்கம் ஏற்படும்.

வெர்டிகோவின் அறிகுறிகள்: 

திடீர் மயக்கம், குமட்டல், வாந்தி, அதிகப்படியான வியர்வை சுரத்தல், கண்பார்வை மங்குதல், ஒற்றை தலைவலி, உடல் சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை! வயதானவர்களை பாதிக்கும் ‘Dementia’ நோய்!
Vertigo

எவ்வாறு தடுக்கலாம்:

படுக்கையில் இருந்து எழும்போது, தலையை திருப்பி பார்க்கும் போது, கீழே குனிந்து நிமிரும் போது பொறுமையான அசைவுகளை கொடுக்க வேண்டும். திடீரென்று நிமிரக்கூடாது.

உட்காரும் போது முதுகுதண்டு நேராக இருக்க வேண்டும்.

உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

அடிக்கடி டீ, காபி குடிப்பதை தவிர்க்கலாம். இதனால் பித்தம் அதிகமாகி மயக்கம் வரும். இதற்கு பதிலாக காலை வெறும் வயிற்றில் சீரகம் கொதிக்க வைத்த நீரில் ½ ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com