இப்போது பலருக்கும் உள்ள பிரச்னை முடி உதிர்வு மற்றும் பொடுகுதான். அதுவும் குளிர்காலம் வந்துவிட்டால் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்குமே இந்த தொல்லைதான். இதற்கு நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி தீர்வுக் காணலாம்.
குளிர்காலங்களில் ஏன் பொடுகு தொல்லை மற்றும் முடி உதிர்கிறது?
குளிர்காலங்களில் வெப்பநிலை குறைந்து உச்சந்தலையில் வறட்சி ஏற்படும். இந்த வறட்சி முடி உதிர்வையும் பொடுகையும் ஏற்படுத்துகிறது. இதனிடைய குளிர்காலத்தில் பொடுகு அதிகரிப்பு பற்றி பேசும் நிபுணர்கள் இயற்கையாகவே உச்சந்தலையில் காணப்படும் நுண்ணுயிரியான மலாசீசியா வளர்ச்சி உச்சந்தலையில் அதிகரிக்கும் போது பொடுகும் அதிகமாகிறது என்று கூறுகிறார்கள்.
சரி இதற்கான தீர்வினைப் பார்ப்போம்:
1. முதலில் தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை கலந்து தலை மற்றும் முடி என அனைத்திலும் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்குக் குளிக்கலாம். தேனை தனியாக தடவினால்தான் நிறம் மாறும். தயிருடன் கலந்து பயன்படுத்திப் பாருங்கள். இது ஈரப்பதத்தைக் காப்பதோடு, பொடுகைப் போக்கும். முடி உதிர்வைத் தடுக்கும்.
2. வெந்தயத்தை முதல் நாள் இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து மறுநாள் அதனுடன் வேப்பிலை, எழுமிச்சை பழம் சாறு ஆகியவற்றையும் சேர்த்து அரைத்துப் பயன்படுத்துங்கள். இதனை உச்சந்தலையில் நன்கு படுமாறு தடவி அரை மணி நேரத்திற்கு பின் குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், வறட்சி, அரிப்பு குறைந்து பொடுகு தொல்லை நீங்கும். வெந்தயம் குளிர்ச்சி என்பதால், குளிர்காலத்தில் அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
3. தேங்காய் எண்ணெயுடன், எலுமிச்சை பழ சாற்றைப் பிழிந்து உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். இது உச்சந்தலையில் பிஅச் லெவலை சமன் செய்து பொடுகு சம்பந்தப்பட்ட பிரச்னையை தடுக்கும்.
4. தண்ணீர் அல்லது கற்றாழை ஜெல்லுடன், வேம்பு மற்றும் நெல்லி பொடியை சேர்த்து ஹேர் பேக் போல் தயார் செய்ய வேண்டும். பின் அதனை 30 நிமிடங்கள் தலையில் தடவி ஊறவைத்து அலச வேண்டும். இதன்மூலம் பொடுகு தொல்லை, முடி உதிர்வு போன்றவற்றைத் தடுக்கலாம்.
இந்த நான்கு வழிகளை பின்பற்றி உச்சந்தலை மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முடி மற்றும் முகச்சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.