meta property="og:ttl" content="2419200" />
பொடுகுத் தொல்லை அனைவராலும் எளிதில் சமாளிக்க முடியாத சருமப் பிரச்னை. இதைப் போக்க என்னதான் பல வழிகளைக் கையாண்டாலும், மறுபடியும் வரத்தான் செய்கிறது. ஆகையால் அதை முன்கூட்டியே எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
உட்கொள்ளும் உணவு முறைகள்:
1. கொழுப்பு நிறைந்த மீன்:
பொடுகை சரியான உணவுகள் உட்கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம். சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் உச்சந்தலையில் ஊடுருவி, பொடுகினால் வரக்கூடிய அலர்ஜிகளைக் குறைக்கின்றன. மேலும், உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கின்றன.
2. முட்டை:
முட்டை என்பது காலை உணவில் பிரதான உணவாக அனைவராலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. முட்டையில் ஜிங்க்(Zinc) மற்றும் பயோட்டின்(Biotin) நிறைந்திருக்கிறது. அவை உச்சந்தலையில் சூப்பர் ஹீரோபோல் செயல்பட்டு ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொடுகை எதிர்த்து போராடும். எனவே, அடுத்த முறை நீங்கள் ஆம்லெட்டை சாப்பிடும்போது, உங்கள் உச்சந்தலையிலும் இதன் மூலம் சிறப்பான நன்மை கிடைக்கிறது என்பதை அறிந்து உண்ணுங்கள்.
3. அவோகேடோ பழங்கள் (Avocados):
அவோகேடோ பழங்கள் நிறைய கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் (minerals) நிரம்பியுள்ளன. இந்தப் பச்சை ரத்தினங்கள் உங்கள் உச்சந்தலைக்குப் பல வகைகளில் நன்மை அளிக்கிறது. இதன் மூலம் பொடுகு உருவாவது முற்றிலும் தடுக்கப்படுகிறது.
4. நட்ஸ் வகைகள்
பாதாம், அக்ரூட் பருப்புகள்(walnuts), வேர்க்கடலை மற்றும் முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் சிறந்த ஊட்டச் சத்துக்களைக் தருகின்றன, மெக்னீசியம், துத்தநாகம்(Zinc), இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம். இருப்பதால் உடலுக்கு பல வழிகளில் நன்மை அளிக்கிறது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு, என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, ஒரு நாளைக்கு ஒன்று, இரண்டு நட்ஸை மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது
5. கீரைகள்:
கீரைகளில் வைட்டமின்கள் A மற்றும் C நிறைந்துள்ளன. அவை பொடுகுக்கு எதிராக செயல்படுகின்றன. உங்கள் சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நடைமுறைகள்:
1. ஈரப்பதம்:
அதிகப்படியான வறண்ட அல்லது அதிக ஈரப்பதம் உள்ள சூழலில் பொடுகு உருவாக வாய்ப்பு உள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தில் சீரான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். வறண்ட குளிர்காலங்களில் மற்றும் வியர்வை நிறைந்த கோடைக் காலங்களில் உங்கள் உச்சந்தலையைத் தினமும் மசாஜ் செய்து ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்துக்கொள்ளுங்கள்.
2. சூரிய ஒளி:
சூரிய ஒளி இயற்கையான முறையில் பொடுகுத் தடுப்புக்கு உதவுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் நேரத்தை செலவிடுவதன் மூலம் உங்கள் தினசரி வைட்டமின் டி அளவை நீங்கள் பெருகிக்கொள்வீர்கள். காரணம் வைட்டமின் D உங்கள் உச்சந்தலையில் பொடுகு வராமல் தடுக்கிறது.
3. தூய்மை:
உங்கள் உச்சந்தலையானது ஒரு வீட்டு விருந்தினரைப் போன்றது. இது சுத்தமான சூழலை விரும்புகிறது. அதிகப்படியான எண்ணெய், இறந்த சருமச் செல்கள் மற்றும் பொடுகுத் தொல்லை ஆகியவற்றை நீக்க உங்கள் தலைமுடியை இடைவெளி விட்டு தவறாமல் கழுவவும்.
4. மன அழுத்தம் இல்லாத சூழ்நிலை:
மன அழுத்தம் பொடுகின் சிறந்த நண்பன். இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து நமக்கு தொந்தரவை தருகின்றன. உங்கள் வாழ்க்கையில் மன அழுத்தம் என்று ஒன்று இல்லாமல் இருக்க, தினமும் தியானம் செய்யுங்கள், யோகா பயிற்சி செய்யுங்கள்; இது நாளடைவில் உங்கள் உச்சந்தலை பொடுகுத் தொல்லையையும் தீர்த்து வைக்கும்.
5. நீரேற்றம்:
உங்கள் உச்சந்தலைக்கும் நீரேற்றம் தேவை! உங்கள் சருமம் மற்றும் உச்சந்தலையைச் செழிப்பாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். இதன் மூலம் அரிப்பு, பொடுகு மற்றும் உலர்ந்த அல்லது உடையக்கூடிய முடி போன்ற பிரச்னைகளை முன்கூட்டியே வராமல் தடுக்கலாம்.