முழங்கால் கருமையை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்! 

Knees
Dark Knees Home Remedies

இன்றைய காலத்தில் பலர் முழங்கால் கருமையுடன் அதிகம் போராடுகிறார்கள். இது பலருக்கு தர்ம சங்கடமான உணர்வையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. அதிகப்படியான சூரிய ஒளி, வறட்சி, இறந்த சரும செல்கள் போன்ற காரணங்களால் முழங்கால் மூட்டுக்கள் கருமையாக மாறுகின்றன. அதை இயற்கையான முறையில் சரி செய்யும் சில வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

எலுமிச்சை சாறு: பாதிக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சை சாறு தடவினால், கருமை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் பண்புகளுக்கு பெயர் பெற்றது, எனவே அதை மூட்டுகளில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் அந்த கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை நீங்களே கண்கூடாகப் பார்க்கலாம். 

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் கருமையான பகுதிகளை ஒளிரச் செய்யவும் உதவுகிறது. பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் போல உருவாக்கி, முழங்கால் பகுதியில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரம் இருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். 

கற்றாழை ஜெல்: கற்றாழை ஜெல் அதன் ஈரப்பதமூட்டும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். கற்றாழை ஜெல்லை நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். இவ்வாறு தினசரி செய்து வந்தால் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். 

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் ஆகும். இது வறண்ட மற்றும் கருமையாக இருக்கும் சருமத்தை சரி செய்ய உதவுகிறது. சிறிது தேங்காய் எண்ணெயை உங்கள் முழங்காலில் தடவி லேசாக மசாஜ் செய்யவும். இதை இரவு நேரத்தில் செய்வது நல்லது. இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் காலப்போக்கில் கருமை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். 

இதையும் படியுங்கள்:
பூமி உளுந்து வடை வடிவத்தில் இருந்தால் என்ன ஆகும்? அடக்கடவுளே! 
Knees

பால் மற்றும் தேன்: பால் மற்றும் தேன் கலவையானது கருமையாக இருக்கும் மூட்டுகளை ஈரப்பதமாக்கி ஒளிரச் செய்யும். பால் மற்றும் தேனை சம பங்கு அளவுக்கு எடுத்து நன்றாகக் கலந்து பேஸ்ட் போல உருவாக்கிக் கொள்ளுங்கள். அதை முழங்கால்களில் தடைவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே விடவும். தொடர்ச்சியாக இவ்வாறு பயன்படுத்தி வந்தால் கருமையான தோலின் தோற்றமானது வெண்மையாக மாறும். 

இது தவிர நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். நீங்கள் நீரேற்றத்துடன் இருப்பது உங்களது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். இத்துடன் பழங்கள், காய்கறிகள், புரதங்கள் நிறைந்த உணவை சேர்த்துக் கொள்வதால் சருமப் புத்துணர்ச்சியை ஆதரிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உங்களுக்குக் கிடைக்கும். இதன் மூலமாகவும் முழங்கால் மூட்டுகளில் உள்ள கருமை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com