தலைமுடி, நகங்கள் வளர்ச்சி, சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பயோட்டின் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

தலைமுடி, நகங்கள் வளர்ச்சி, சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பயோட்டின் பற்றித் தெரியுமா உங்களுக்கு?
Published on

பயோட்டின் என்றால் என்ன?

யோட்டின் என்பது நீரில் கரையக்கூடிய ஒரு முக்கியமான விட்டமின். இது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. விட்டமின் பி 7 அல்லது விட்டமின் ஹெச் என்று அழைக்கப்படும் இது கார்போஹைட் ரேட்டுகள் கொழுப்புகள் மற்றும் புரதங்களை ஆற்றலாக மாற்ற உதவுகிறது. இது மனிதனின் தலைமுடி, தோல், நகங்கள் போன்றவை ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

உடலில் பயோட்டின் குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்

யோட்டின் சத்து குறைந்தால் குழந்தைகளுக்கு வலிப்பு நோய் மற்றும் உடல் வளர்ச்சியில்  தாமதம் ஏற்படும். தைராய்டு கோளாறுகள், தலைமுடி உதிர்வு, டைப் 2 டயாபடீஸ்,  வறண்ட தோல், தோல் எரிச்சல், மற்றும் உடல் சோர்வு  பிரச்சினைகள்  தோன்றும்.

தலைமுடி, நகங்கள் வளர்ச்சி, சரும ஆரோக்கியத்தில் பயோட்டின் பங்கு;

ருவருக்கு தலை முடி அதிகமாக உதிர்ந்தால் அவருக்கு பயோட்டின் குறைபாடு இருக்கலாம். முடி வளர்வதற்கு தேவையான கெரட்டின் தயாரிக்க பயோட்டின்  உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
நெல்லிக்கனி என்னும் அற்புதக் கனி!
தலைமுடி, நகங்கள் வளர்ச்சி, சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பயோட்டின் பற்றித் தெரியுமா உங்களுக்கு?

பயோட்டின் நிறைந்த உணவுகள்

முட்டை, சால்மன் மீன், சூரியகாந்தி விதைகள், இனிப்பு உருளைக்கிழங்கு, பாதாம் பருப்பு, பீன்ஸ்,  காய்கறிகள் ஆரஞ்சு பழங்கள் முளைக்கட்டிய பயிர் வகைகள், கீரை வகைகள், ப்ராக்கோலி பால், முழு தானியங்கள், யோகர்ட் , வாழைப்பழம், காளான், அவகோடா போன்றவற்றில் பயோட்டின் அதிகமாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com