கூகுள் இமேஜ் உருவாக்க காரணமாக இருந்தது ஒரு ஆடைதான் என்பது தெரியுமா?

Grammy Award Ceremony
Google dressImage credit - people.com
Published on

கூகுள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, கணினியில் ஒரு சில வார்த்தைகளை மட்டும் தட்டச்சு செய்வதன் மூலம் கிட்டத்தட்ட எதையும் பற்றிக் கண்டுபிடிக்க முடிந்ததைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டனர்," கூகுள் " 1998 இல் நிறுவப்பட்டது. ஆனால் கூகுள் இமேஜஸ் ஜூலை 2001 வரை தளத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை. அதன் பின்னர்தான் கூகுள் இமேஜ் அதன் தளத்தில் உருவாக்கப்பட்டது. அதற்கு காரணமாக இருந்தது ஒரு ஆடை என்றால் ஆச்சரியமான விஷயம்தானே! அதைப் பற்றிய தகவல்களை பார்ப்போம்.

50 வயதான அமெரிக்க பிரபல நடிகை மற்றும் பாடகி ஜெனிஃபர் லோபஸ், பிப்ரவரி 23, 2000 அன்று நடந்த 42வது கிராமி விருது விழாவிற்கு பச்சை நிற வெர்சேஸ் சில்க் சிஃப்பான் ஆடையை அணிந்து வந்திருந்தார். அந்த மெல்லிய துணியானது வெப்பமண்டல இலை மற்றும் மூங்கில் வடிவத்தால் உருவாக்கப்பட்டது.

ஜெனிஃபர் லோபஸ் அணிந்திருந்த , சில்க் சிஃப்பான் ஆடையை வடிவமைத்தவர், டொனாடெல்லா வெர்சேஸ். கிராமி விழா மேடையில் சிவப்புக் கம்பளத்தின் மீது இந்த உடையை அணிந்து லோபஸ் நடந்து வந்தபோது மிகவும் பிரபலமானது.

இதையும் படியுங்கள்:
கருவளையத்தை நீக்கும் குங்குமப்பூ எண்ணெய்!
Grammy Award Ceremony

நிகழ்சிக்குப் பிறகு பல வாரங்களாக ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்குத் துறையினரால் இந்த ஆடை விவாதிக்கப்பட்டது, பல பிரபல தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரிகை அட்டைப்படங்களில் அவரைப் பற்றி செய்திகள் இடம் பெற்றன. இந்த நிகழ்வுக்குப் பிறகு வெறும் 24 மணி நேரத்தில் கிராமி வலைத்தளத்திலிருந்து பச்சை நிற உடையில் லோபஸின் படங்கள் 642,917 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டன.

பின்னர் அந்த ஆடையின் புகைப்படங்களைத் தேடிய பலர், கூகுள் இணைய தளத்தில் படங்களை தேடினர். கூகுள் பொறியாளர்கள் இது தேடலின் அளவில் மிகப்பெரிய ஆச்சரியத்திற்கு வழிவகுத்ததாகக் கூறினர், அதுவரை URLகள் மற்றும் உரைகளின் பட்டியலை வழங்குவதற்கு மட்டுமே கூகுள் இருந்தது.

அமெரிக்க பாடகி ஜெனிஃபர் லோபஸ், 2000 ஆம் ஆண்டு கிராமி விருதுகளுக்கு அணிந்திருந்த பச்சை நிற வெர்சேஸ் உடை, தான் கூகுள் இமேஜஸ் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. ஜூலை, 2001 இல் கிட்டத்தட்ட தனியாகத் கூகுளில் இமேஜ் பகுதி தொடங்கப்பட்டது.

பயனர்கள் வெறும் உரையை விட இணையத்தில் புகைப்படங்களைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்த பிறகு, அந்த உடை கூகுள் இமேஜஸ் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. முன்னாள் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் ஷ்மிட் 2015 ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில் "புகைப்படத் திரட்டலின் தேவை "முதலில் 2000 கிராமி விருதுகளுக்குப் பிறகு தெளிவாகத் தெரிந்தது, அதற்கு ஜெனிஃபர் லோபஸ் உலகின் கவனத்தை ஈர்த்த அந்த பச்சை நிற உடைதான் காரணமாக இருந்தது" என்று உறுதிப்படுத்தினார்.

ஜெனிபர் லோபஸின் உடைதான் அந்த நேரத்தில் கூகுளில் மிகவும் பிரபலமான தேடலாக இருந்தது அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது . ஜனவரி 2000 இல் பிரான்சில் நடந்த NRJ இசை விருதுகளுக்கு ஸ்பைஸ் கேர்ள் கெரி ஹாலிவெல் இதே ஆடையை அணிந்திருந்தார். இருப்பினும், லோபஸைப்போல அதிக கவனத்தைப் பெற அவர் தவறிவிட்டார்.

இதையும் படியுங்கள்:
கடினமான தொழில் செய்வோர் தலைமுடியை காக்கும் வழிகள்!
Grammy Award Ceremony

இந்த உடையின் மறு-வேலை செய்யப்பட்ட பதிப்பு, வெர்சேஸின் ஸ்பிரிங் 2020 நிகழ்ச்சியில் அணிந்து செல்லப்பட்டது. 2020 ஆம் ஆண்டு, மிலன் ஃபேஷன் வீக்கில் வெர்சேஸின் ஸ்பிரிங்-சம்மர் நிகழ்ச்சியில் ஜெனிபர் லோபஸ் மீண்டும் அதே பச்சை நிற உடையை அணிந்து மக்களை பரவசப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த உடை, பாத், ஃபேஷன் மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com