
மேக்கப் சாதனங்கள் நாளுக்கு நாள் புதுப்புது வண்ணம், பிராண்டு, ஸ்டைல்கள், ஃபேஷன்களில் (Different types of eyeliner) அறிமுகமாகின்றன. இதில் எந்த மேக்கப் எப்படி போடலாம், அதில் உள்ள நுணுக்கங்களை அழகு கலை நிபுணர்கள் திறமையாக செய்வார்கள்.
அவர்களிடம் சிலமுறை கற்றுக்கொண்டு நாமே வீட்டிலிருந்து அழகாக முகத்துக்கான மேக்கப்பை செய்து கொள்ளலாம். முகத்துக்கான மேக்கப் எனில் கண்மை, ஐ ஷேடோ மற்றும் ஐ லைனர்கள்தான்.
ஐ லைனர்கள் கண்களை எடுப்பாகவும், பளிச்சென்று எடுத்துக் காட்டும். கருப்பு மற்றும் பல வண்ணங்களில் வரும் ஐ லைனரை பயன்படுத்த சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐ லைனர் மட்டுமல்ல, லைனர் வரைவதிலும் ஏகப்பட்ட வெரைட்டி கள் உள்ளன. காஜலாக ஆரம்பத்தில் வந்தது பின் லிக்விட் ஐ லைனர், வாட்டர்ஃப்ரூப் ஐலைனர், புரொபஷனல் மேட் இன்க், ஜெல் லைனர், ஜெல் கிரையான், டாட்டூ லைனர், லைனர் பென்சில், ஆல் டே லிக்விட், லைனர் பேனா, ஸ்மோக்கி லைனர், ஃபிளைஐலைனர், கலர்ஐலைனர், ஹெச்.டி லைனர் என வெரைட்டியாக ஐலைனர்கள் உள்ளன.
ஒவ்வொரு வகைகளும் ஒவ்வொரு விதமான லுக்&ஸ்டைல் கொடுக்கும். சில வகைகளாக…
கிராஃபிக் ஆரோ ஐலைனர்
கண்கள் மேல் பக்கத்தில் ஒரு பறவையின் அலகுபோல வரைவது. இதை பெரும்பாலும் பெரிய கண்கள், இமைகள் உள்ளோர் முயற்சிக்கலாம்.
நேச்சுரல் லைனர்
எல்லோருக்குமான சாதாரண லைனர். யார் வேண்டுமானாலும் அழகாக போட்டுக்கொள்ளலாம்.
திக் விங்
மேல் இமைகளில் அடர்த்தியாக அக்கால நடிகைகள் போட்டிருந்ததுபோல போட, அழகாக இருக்கும். ஜெல் ஐ லைனர்களில் இந்த லுக் கிடைக்கும்.
ஆல் அரௌண்ட் விங்
முழு கண்களையும் கவர் செய்து வெளியே ரெக்கை போல் இழுக்கும் முறை. கண்கள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.
லாங் லைன்
வீட்டில் குழந்தைகளுக்கு கண்களின் ஓரத்தில் கண்மை இழுத்து விடுவது போல் நீளமாக கோடு போட்டுக்கொள்வது.
ரிவர்ஸ் விங்
கண்களுக்கு அடியில் மட்டும் லைனரை றெக்கை போல் இழுத்துவிட்டு மேல் இமையை அப்படியே விடுவது.
ஸ்மோக்கி லைனர்
கண்கள் மேல் பகுதி முழுக்க பரவியதுபோல லைனர் போட்டுக் கொள்வது. இந்த லுக் ல் கருப்பு அல்லது க்ரே நிற ஐஷே டோக்களை பயன்படுத்தலாம். இவை மட்டுமன்றி ப்ளூ லைன்,கிரீன் லைன், பிளாக்&ஒயிட் லைன், டபுள் கலர் லைன், டிரிபிள் ஷேட் லைன் என நிறைய லைன் லுக்குகள் உள்ளன.
கருவளையம் உள்ளவர்கள், கண்கள் மிகவும் சின்னதாக உள்ளவர்கள், குழிக்கண்களாக இருப்பவர்கள் ஸ்மோக்கி லைனர் உபயோகிக்க கூடாது. இது அவர்களின் கண்களை மேலும் கருப்பாக காட்டும்.
கண்கள் சின்னதாக இருப்பவர்கள் ஐலைனரில் ரிச் கலர்களையும், பெரிய கண் கொண்டவர்கள் நேச்சுரல் லுக் லைனரை உபயோகிக்கலாம். பரதம் மற்றும் டான்ஸ் ஆடுபவர்கள் தங்களின் கண்களை எடுத்துக்காட்ட சரியான ஐலைனரை உபயோகிக்க அழகாக இருக்கும்.
எந்த மேக்கப் என்றாலும் இரவு படுக்கும் முன் லைனரை ரீமூவர் கொண்டு கலைத்திட வேண்டும். சோப்,ஃபேஸ் வாஷ் கொண்டு கண்களை அழுத்தி தேய்க்கத் கூடாது. நல்ல பிராண்டட் பொருட்களையே எப்போதும் உபயோகிக்க பினிஷிங் நன்றாக வருவதுடன் கண் எரிச்சல், கண் சிவத்தல் போன்ற பிரச்னைகள் ஏதுமின்றி நன்றாக இருக்கும்.