
நம்ம எல்லாருக்குமே நம்ம முகத்தை நல்ல பளபளன்னு வச்சுக்கணும்னு தான் ஆசை. ஆனா நாம வெளியில போகும்போது, சூரிய கதிர் வீச்சினால நம்ம சருமத்துல பல மாற்றங்கள் ஏற்படுது. அதுலயும் குறிப்பா முகம் தான் ரொம்ப பாதிக்கப்படுது. அது எப்படின்னா சூரிய கதிர்வீச்சில் இருந்து வெளிவரும் UVA & UVB போன்ற கதிர்வீச்சுகள் நம்ம முகத்துல டைரக்டா படுறதுனால, சருமத்த பாதுகாக்குறதுக்காக மெலனின் என்ற நிறமி சுரக்க ஆரம்பிக்குது. அதுவே அதிகமாக சுரக்கும் போது, சருமத்துல கருமை நிறம் ஏற்படுது. அதுவே முகத்தில் திட்டு திட்டா இருக்குறதுக்கு காரணமாகுது. இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட, நம்ம வீட்ல இருக்கிற ஒரு சில பொருட்களை வைத்து இதுல இருந்து எளிமையா நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் (Tan Removal Tips).
தயிர் + கற்றாழை
ஒரு கிண்ணத்துல ரெண்டு டீஸ்பூன் தயிர் எடுத்து, அதுல கொஞ்சமா கற்றாழை ஜெல்ல விட்டு ஒரு ஸ்பூனால நல்லா கலக்கணும். அப்புறம் அந்த கலக்கின பேஸ் பேக்க முகத்துல மெதுவா அப்ளை பண்ணணும். முகத்தில் அப்ளை பண்ணும் போது சர்குலர் (வட்ட வடிவில்) மோஷன்ல அப்ளை பண்ணணும். இப்போ அத 15 நிமிஷத்துக்கு அப்படியே காய விட்டுடலாம். தயிர்ல உள்ள லாக்டிக் அமிலம் நம்ம சருமத்துல உள்ள இறந்த செல்களை அகற்றும். அதேபோல கற்றாழை நம்ம சருமத்த குளிர்ச்சியா, ஹைட்ரேட்டடா வைத்துக்கொள்ளும்; அதுமட்டுமில்லாமல் கருமை நிறத்தையும் ரிமூவ் பண்ணும். இப்போ காய்ந்ததுக்கு அப்புறம் குளிர்ந்த நீரில்ல முகத்தை நல்லா கழுவணும். முக்கியமா முகத்த கழுவும் போது அழுத்தி தேச்சு கழுவ கூடாது. அப்படி பண்ணும் போது மேலும் கருத்துப் போக சான்ஸ் இருக்கு. இது முதல் ஸ்டெப் அடுத்து, நம்ம ரெண்டாவது ஸ்டெப் என்னன்னு பாப்போம்.
தக்காளி + தேன்
சிறிது துண்டு தக்காளியை நன்கு பிசைந்து கூழாக்கி, அதில் ஒரு டீஸ்பூன் தேனை விடவும். அதனை நன்கு கலக்கவும். தக்காளியில் உள்ள லைகோபின் சருமத்துல சுரக்கின்ற மெலனின் சுரப்பிய கட்டுப்படுத்தும். அதேபோல தேன் நம்ம சருமத்த ஹைட்ரேட்டடா பாதுகாப்பா வைத்துக்கொள்ளும். இப்போது இந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவவும். பத்து நிமிடங்களுக்குப் பின் காய்ந்த பிறகு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இந்த இரண்டு ஃபேஸ் பேக்குகளையும் ஏதாவது ஒன்றை மட்டும் வாரத்துக்கு மூணு தடவை போடவும். தினமும் இந்த ஃபேஸ் பேக் போடணும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை.
இதையும் தாண்டி, ஐஸ்கட்டிகளை ஒரு காட்டன் துணியில் வைத்து அதனை முகத்தில் மெதுவாக அழுத்தி எடுக்கும்போது கருமையும் படிப்படியாக குறையும், அதேபோல் முகத்தில் உள்ள சிறு துளைகளும் அடைக்கப்படும்.
ஃபேஸ் பேக் மட்டும் போதுமா? உணவு பழக்கமும், லைப் ஸ்டைலும் வேணும்.
முகத்துக்கு வெளிய நாம போடுற பேஸ்பேக்குகளையும் தாண்டி, நம்ம உடம்பையும் நல்ல குளிர்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் வச்சுக்கிறது ரொம்ப முக்கியம். அதுல நாம சத்தான பழங்கள், காய்கறிகளை சாப்பிடணும். நெல்லிக்காய், தண்ணிப் பழம், இளநீர், நுங்கு இப்படி குளிர்ச்சி தர பழங்கள நாம வெயில் காலத்தில எடுத்துக்கணும். அதேபோல கீரை வகைகள் சத்தான காய்கறிகள் எல்லாத்தையும் நம்ம உணவுகள்ல சேர்த்துக்கணும். முக்கியமா ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணியாவது குடிக்கணும்.
இதெல்லாம் ஓகே... முக்கியமா உடற்பயிற்சியும் தேவை.
தினமும் 30 லிருந்து 45 நிமிஷம் வாக்கிங், ஜாக்கிங், பிரீத்திங்க் எக்ஸர்சைஸ் போன்று உங்க உடம்புக்கு ஏத்த மாதிரி உடற்பயிற்சியை செஞ்சு உடம்ப நல்லா ஆரோக்கியமா வச்சுக்கோங்க.
மதிய வெயில்ல வெளியில போகிற சந்தர்ப்பம் வரும்போது குடை எடுத்துட்டு போங்க, தொப்பி போட்டுக்கோங்க, மாஸ்க் போட்டுக்கோங்க, கையுறை அணிஞ்சுக்கோங்க... இப்படி பண்ணா சூரிய வெளிச்சத்தில் இருந்து வருகின்ற UV கதிர்களிடமிருந்து நம்ம சருமத்த பாதுகாத்துக்கலாம்.
முக்கிய குறிப்பு:
இதில் கூறப்பட்ட பேஸ் பேக்குகள் எல்லாமே உடனடியாக தீர்வை தராது என்பதை நினைவில் வைக்க வேண்டும். படிப்படியாக உங்களது வாழ்க்கை முறையையும், உணவு பழக்க வழக்கங்களையும் மாற்றினால் மட்டுமே பலன் தரும். மேலும் இதைப் பற்றிய கூடுதல் விழிப்புணர்வுகாகவும், பரிந்துரைக்காகவும் சரும மருத்துவரை அணுகுவது சிறந்தது.